வயலில் திருமணம் ...ஆட்டுக்குட்டி மொய் !

பசுமைத் திருமணம்

திருமணமும் சரி... திருமண வரவேற்பும் சரி... படுபிரமாண்டமாக நடப்பதுதான் இப்போது இங்கே ஃபேஷன்! பிரமிப்பூட்டும் அலங்காரம், இசைக் கச்சேரி, அசத்தலான வாழை இலை விருந்து, உடல் முழுக்க தங்கச் சரங்களை சுற்றி நிற்கும் மணப்பெண்... என்று ஆடம்பரமாக நடத்தப்படும் திருமண நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு நடுவே.. சென்னையைச் சேர்ந்த திருமலை - அனுஷா தம்பதியின் திருமணம் மற்றும் வரவேற்பு மிகமிக எளிமையாகவும், புதுமையாகவும் நடத்தப்பட்டது... மனதும், உள்ளமும் குளிர்ந்து அனைவரையும் 'அட சூப்பர்’ என்று கைதட்ட வைத்தது! 

சென்னை, திருநின்றவூர் அருகேயுள்ள பாக்கம் என்ற ஊரில் பச்சைப்பசேல் என படர்ந்திருக்கும் வயல்வெளி; கண்ணைப் பறிக்கும் கீரைகள்; வேலியைத் தாண்டி துள்ளியோடி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ஆட்டுக் குட்டிகள்; பம்புசெட்டு நீரில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள்... இத்தகைய இயற்கை சூழலைக் கண்களில் படம்பிடித்தபடியே கடந்தால்... வயல்வெளிகளுக்கு நடுவில் ஷாமியானா பந்தலில் சிம்பிளாக நடந்தது திருமலை - அனுஷா தம்பதியின் திருமண வரவேற்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick