மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகுங்கள் !

டயட்

ர் இளம்பெண்ணின் வாழ்க்கை, மொத்தமாக திசைமாறும் நாள்... திருமண நாள். தேதி உறுதியாகிவிட்டது என்றதுமே எங்கிருந்துதான் முகத்தில் அத்தனை களை வந்துசேருமோ தெரியாது... அப்படி ஓர் அழகு, இயற்கையாகவே ஓடோடி வந்து ஒட்டிக் கொண்டுவிடும்! அத்தகைய அற்புத பூரிப்பு தரும் திருமண நாளன்று, அழகாக மட்டுமல்லாமல்... ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் இருப்பதுதானே முக்கியம்! அதுமட்டுமா... அதையடுத்த தாம்பத்யம், கருத்தரிப்பு, பிரசவம்... என்று தொடரும் நாட்களிலும், அந்த ஆரோக்கியம் தொடர்வதுதானே வாழ்க்கையை சுவாரசியமாக்கும்! அதற்காகவே... கல்யாணத்துக்குத் தயாராகும் பெண்கள், உடம்பு மற்றும் மனதுக்கு உறுதி தரும் எந்தெந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்... எந்தெந்த விஷயங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் இங்கே விவரிக்கிறார்... 'க்வா நியூட்ரிஷன்' எனும் அமைப்பைச் சேர்ந்த டயட்டீஷியன் பவானி! 

''கல்யாணம் முடிவு செய்த நாளிலிருந்தே உடம்புக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. இத்தகைய கவனிப்புதான் சுகமான தாம்பத்யம், நலமான கருத்தரிப்பு, அழகான குழந்தை, கூடுதலான ஆயுள்... என்று எல்லாவற்றையும் உறுதி செய்யும்'' என்று அழுத்தம் கொடுக்கும் பவானி,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick