மினுக்குது மொய் கவர்... கலக்குது கிஃப்ட் கவர் !

மொய் கவர்

திருமணத்துக்கு போகும் அவசரத்தில், நாம் கொண்டு செல்லும் கிஃப்ட் அல்லது கொடுக்க நினைக்கும் மொய் பணத்துக்கு... கவர் வாங்க மறந்திருப்போம். பணமாக இருந்தால்... பக்கத்திலிருக்கும் பெட்டிக்கடையில், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று விற்கப்படும் கவரை அவசரம் அவசரமாக வாங்கி, அதில் பணத்தை நான்காக மடித்துத் திணித்து... மணப்பெண்/மணமகன் கைகளில் திணிப்போம். கிஃப்டாக இருந்தால், 'கடனே' என்று கடைகளில் சுற்றித் தரப்படும் கிஃப்ட் ரேப்பரோடு அவர்கள் கையில் கொடுத்துவிட்டு... கேமராவுக்கு ஒரு சிரிப்பை உதிர்த்து நகர்ந்துவிடுவோம்! 

கீழே இறங்கி வரும்போதுதான்... 'அட, அழகான ஒரு கவர்ல வெச்சுக் கொடுத்திருக்கலாம். சூப்பரா பேக் பண்ணிக் கொடுத்திருக்கலாம்... போட்டோவுல, வீடியோவுலயெல்லாம் அசிங்கமா தெரியப்போகுது' என்று வருத்தப்பட்டபடியே... டைனிங் ஏரியாவுக்கு நடைபோடுவோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick