போட்டோகிராஃபி!

''சிறுவயதில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வாங்கும் ஆங்கில இதழ்களில் உள்ள படங்களை கட் செய்து எடுத்து வைத்துக்கொள்வேன். போட்டோகிராஃபியில் எனக்கிருந்த ஆர்வத்தை என்னை உணர வைத்தவை அந்தப் படங்கள்தான். முதியவர் ஒருவர், மழைக் காலத்தில் கழுத்தளவு நீரில் தையல் மெஷினை கையில் ஏந்தியவாறு சிரித்த முகத்துடன் நடந்து வந்த புகைப்படம், என் மன வேர் வரைச் சென்றது. ஒரு புகைப்படத்தில் இவ்வளவு உணர்ச்சிகளை கொண்டுவர முடியுமா என்று வியந்தேன். ஓர் அட்டையை செவ்வகமாக வெட்டி, ஒரு ஓட்டை போட்டு, அதன் வழியே ஆங்கிள் பார்ப்பேன். அதுதான் என் முதல் கேமரா!''

- புன்னகை தவழ்ந்துகொண்டே இருக்கிறது பிரபல புகைப்படக் கலைஞர் அருண் டைட்டனின் முகத்தில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick