'அடுத்த மணப்பெண்‘ ... அவர்களுக்கும் உண்டு பேக்கேஜ்!

திருமணம் என்றால் மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் மட்டும்தான் அலங்காரமா! மணமக்களின் உறவினர்கள், தோழிகளுக்கும் வந்து விட்டது ‘ரிலேஷன் ஆஃப் பிரைடல்’ மற்றும் ‘ஃப்ரெண்ட் ஆஃப் பிரைடல்’ பேக்கேஜ்கள்!  

நெயில் பாலிஷ் முதல் ஹேர் ஸ்டைல் வரை மொத்த அலங்காரமும் அடங்கும் இந்த பேக்கேஜில், சகோதரி தேர்ந்தெடுத்திருக்கும் ஆடைக்கு ஏற்ப, அவருக்கான அலங்காரத்தை பார்லரில் முடிவு செய்வார்கள். இந்த பேக்கேஜ் சுமார் 1,500 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. மணப்பெண் மேக்கப்புக்கு அடுத்த கிராண்ட் லுக்கில் அமையும் இந்த அலங்காரம் மண்டபத்தில், ‘யார் மணப்பெண்... இவரா, அவரா..?’ என்கிற கேள்வியை எழுப்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick