100% திருப்தி! | Editorial -Aval Manamagal | அவள் மணமகள்

100% திருப்தி!

றவினர் வீட்டுத் திருமணத்துக்குப் போயிருந்தேன். வரவேற்பில் ஆரம்பித்து ரிட்டர்ன் கிஃப்ட் வரை அசத்தியிருந்தார்கள். போன மாதம் மகனுக்குத் திருமணம், இந்த மாதம் மகளுக்குத் திருமணம் என அடுத்தடுத்து நடத்தினாலும், இரண்டு திருமணங்களும் சிறப்பாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன.

வித்தியாசமாக அலங்கரிக்கப்பட்ட வரிசைத் தட்டுகள், மணப்பந்தல் அலங்காரம், வீடியோகிராபி என எல்லாமே நவீன டிரெண்ட்டுக்கு தகுந்த மாதிரியே மாறியிருந்தது. அதேசமயம், ஆர்ட்டிஃபீஷியலாக புடவை கட்டிய பொம்மைகளை வணக்கம் போட்டு வரவேற்க வைக்காமல், ஈவன்ட் மேனேஜ்மென்ட் பெண்களையும் நிறுத்தாமல், வீட்டு உறவுகளையே உபசரிப்பாளர்களாக இருக்குமாறு பொறுப்பு கொடுத்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick