திருக்குறள் திருமணங்கள்!

தேனி மாவட்டத்தில் உள்ள நாகாலாபுரம் கிராமத்தின் சிறப்பு, திருக்குறள் திருமணங்கள்! இதை வெற்றிகரமாக செயல்படுத்தி, மக்களிடையே தமிழார்வத்தை ஏற்படுத்தி வருகிறார், ஊரில் உள்ள திருக்குறள் மன்ற பொறுப்பாளர் இளங்குமரன். எதற்காக என்றே தெரியாமல் செய்யப்படும் சடங்குகளாக இல்லாமல், தமிழில் விளக்கம் தந்து, முத்தான நான்கு வழிபாடுகளுடன் நடக்கும் இந்தத் திருமணங்களுக்காக இளங்குமரனுக்குச் சொல்ல வேண்டிய பாராட்டுகள் பல!

‘‘எங்கள் ஊரில் இருந்த சிவசங்கரன் என்பவர், பள்ளிக்குச் செல்லாமல் சுயம்புவாக சங்க இலக்கிய, இலக்கணங் களைக் கற்றுத் தேர்ந்தவர். தான் உணர்ந்த தமிழ் மொழியின் பெருமைகளைத் திருக்குறள் வாயிலாக மக்களிடையே பரப்புவதற்காக, திருக்குறள் மன்றம் ஒன்றை நிறுவினார் சிவசங்கரன். எனக்குத் திருவள்ளுவர் மீதும், திருக்குறள் மீதும் அளவில்லா மல் பிரியம் வந்தது அவரால்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick