க்ரியேட்டிவ் க்ளிக்ஸ்!

மார்க்கெட் டிரெண்டுக்கு ஏற்றவாறு, வேகமாக வளர்ந்துவரும் திருமண புகைப்படக் கலைத் துறையில், சமகால புகைப்பட கலைஞர்களுக்கு சவாலாக வலம் வருபவர்களில் ஒருவர், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் யாதவ். நிகழ்வுகளை பதிவு செய்வதிலும் சரி, திருமணத்துக்குப் பின்பான போட்டோ ஷூட்டிலும் சரி... க்ரியேட்டிவ் க்ளிக்ஸால் கவர்ந்து வருகிறார்.

“பேஸிக்கா நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். பப், பார்ட்டினு சுத்துறதைவிட, இயல்பான மக்களோட வாழ்க்கை, இயற்கைவெளினு ஊர் சுத்துறதுதான் ரொம்ப புடிக்கும். அப்படி போகும்போது கேமராவையும் கையிலெடுக்க ஆரம்பிச்சேன். அப்படியே நட்பு வட்டங்களின் திருமணங்களுக்கு படமெடுக்க ஆரம்பிச்சேன். இப்போ... ஒரு பக்கம் சாஃப்ட்வேர், மறுபக்கம் வெடிங் போட்டோகிராபர்னு ரெட்டைக் குதிரை சவாரி...” என ஜாலியாக பேசும் கார்த்திக்கின் புகைப்படங்களில் சில, இங்கே உங்கள் பார்வைக்கு....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick