மங்கள மாங்கல்யம்!

முகூர்த்த நாளின் ஆதார ஆபரணம், மாங்கல்யம். பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரிய இந்த மாங்கல்யத்தில் பல வடிவங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஊர், இனம், மதம் என அது இந்தக் காரணிகளின் பின்புலத்தில் உருவான வடிவமாக இருக்கும்.

‘‘அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் மாங்கல்யமும் நகைக் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் என்பது இல்லை. எனவே, முகூர்த்த நாள் குறிக்கப்பட்ட பின், ‘தாலிக்கு பொன் உருக்குவது/கொடுப்பது’ என்கிற சம்பிரதாய நாள் குறிக்கப்பட்டு, அன்று பொற்கொல்லரிடமோ, நகைக்கடைக்கோ சென்று, தங்கள் குடும்பத்தின் பாரம்பர்ய தாலி வடிவத்தை சுட்டிக்காட்டி, செய்துதரச் சொல்லி ஆர்டர் கொடுப்பார்கள். மற்ற நகைகளைப் போல மங்கல்யத்தை வாங்கி வீட்டில் காக்க வைக்கக் கூடாது. திருமண நாளுக்கு முந்தைய தினம் வந்து வாங்கிச் செல்வதுதான் வழக்கம்!’’ என்று தகவல்கள் சொன்னார், திருவண்ணாமலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக தங்க நகைகள் செய்து வரும் ஆசாரி சுரேஷ்குமார். தாத்தா, அப்பா என்று இது இவர்களின் பரம்பரைத் தொழில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick