ரிட்டர்ன் கிஃப்ட்டுக்கு... பனை ஓலை பாக்ஸ்! | Eco return gift for Marriage - Aval Vikatan | அவள் மணமகள்

ரிட்டர்ன் கிஃப்ட்டுக்கு... பனை ஓலை பாக்ஸ்!

திருமணங்களில், வரும் விருந்தினர்களுக்கு தாம்பூலப்பை கொடுக்கும் கலாசாரத்தின் இன்றைய அப்கிரேடட் வெர்ஷன்... ‘ரிட்டர்ன் கிஃப்ட்ஸ்’. ஜூட் பையில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் வரை, ஒவ்வொருவரும் அவரவரின் வசதி, ரசனைக்கு ஏற்ப ரிட்டர்ன் கிஃப்ட்டை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தப் புள்ளியில் கொஞ்சம் புதுமையாக யோசித்து, தனக்கான தொழிலை ஏற்படுத்திக்கொண்டுள்ளார் கோவையைச் சேர்ந்த ரேணுகா. இவர் செய்து கொடுப்பது, ரிட்டர்ன் கிஃப்ட்டுகளுக்கான பனை ஓலை பாக்ஸ்கள்!

‘‘எம்.பி.ஏ. ஃபைனான்ஸ் படிச்சுட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். திருமணத்துக்கு அப்புறம் வேலையைத் தொடர முடியலை. இயற்கையின் மீது எனக்கு எப்பவுமே பிரியம். அதுக்கு ஆதரவான ஒரு விஷயத்தை செய்யலாம்னு யோசிச்சேன். கிராஃப்ட்டில் ஆர்வம் உள்ள நான், என் உறவினர் ஒருவரின் குழந்தையோட பிறந்தநாளுக்கு, பனை ஓலை பாக்ஸில் கிஃப்ட் கொடுத்தேன். விழாவுக்கு வந்திருந்த எல்லோரும் அதை ரொம்பவே ஆச்சர்யத்தோட ரசிச்சுப் பாராட்டினாங்க. அதையே பிசினஸா மாற்றினேன். சின்ன வட்டம், கொஞ்சம் பெரிய வட்டம், பெரிய வட்டம்னு படிப்படியா தொழில் வளர்ந்தது. இப்போ திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷங்களுக்கு ஆர்டர்கள் எடுத்து பனை ஓலை பாக்ஸை செய்து கொடுக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick