வெற்றி ரகசியம்!

ரு திருமண விழாவுக்குச் சென்றிருந்தோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அப்படி ஒரு திருமண விருந்தை அதற்கு முன் நான் உட்பட அங்கு வந்திருந்த பலரும் சுவைத்திருக்க மாட்டார்கள். பெங்காலி ஸ்வீட்ஸ் துவங்கி, நம் ஊர் இனிப்பு வரை அத்தனை இனிப்பு வகைகளையும் குட்டி குட்டியாக செய்து பரிமாறினார்கள். செட்டிநாடு குழிப்பணியாரம் துவங்கி, சைனீஸ் நூடுல்ஸ், இத்தாலியன் பாஸ்தா... என்று பல வகை அயிட்டங்களால் அசத்தி இருந்தார்கள். ஃப்ரூட் சாலட், ஐஸ்க்ரீம்... என்று எதையும் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளை இம்ப்ரஸ் செய்ய பாப்கார்ன், பஞ்சுமிட்டாய் என்று தனி ஏரியா வேறு!

எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பெரியம்மா ஒருவர், அன்று விரத நாள் என்பதை சுட்டிக்காட்டி, ‘எனக்கு சாப்பாடு வேண்டாம். டிபன் அயிட்டம் இருந்தா வைங்க... இல்லைனாலும் பரவாயில்லை’ என்று சொல்ல... இப்படி விரதமிருப்பவர்களும் வருவார்கள் என்பதை எதிர்பார்த்து, அவர்களுக்கும் ஏற்பாடு செய்திருந்ததைக் கண்டு பலரும் வியந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick