கனவுக்கு உருவம் கொடுக்கும் வெடிங் கேக்! | Decorative Wedding Cakes - Aval Manamagal | அவள் மணமகள்

கனவுக்கு உருவம் கொடுக்கும் வெடிங் கேக்!

பிறந்தநாளுக்கு மட்டுமல்ல... இப்போது திருமணங்களிலும் ‘வெடிங் கேக்’ என்ற பெயரில் கேக் வெட்டிக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்க, டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் மதுரைப் பெண் திவ்யா அசோக், அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கு வீட்டிலிருந்தே வெடிங் கேக் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார் பிஸியாக!

‘‘என் மகள் அனு, தன் பிறந்தநாளுக்கு பொம்மை வடிவிலான கேக் வேண்டும் என்று ஆசையாக கேட்டு நச்சரிக்க, அவளுக்காக பேக்கிங் கிளாஸ் சென்று கேக் செய்யக் கற்றுக்கொண்டு, வீட்டிலேயே கேக் செய்தேன். அவள் பிறந்தநாளின் ஹைலைட்டே, கேக்தான்! வந்தவர்களுக்கு எல்லாம் மிகவும் பிடித்துவிட்டது. மற்ற குழந்தைகளின் அம்மாக்கள், ‘எங்கள் பிள்ளைகளின் பிறந்தநாளுக்கும் கேக் செய்து கொடுங்கள்’ என்று ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நானும் ‘டிடி’ஸ் பேக் ஷாப் என்ற என் ஹோம் கேக் பிசினஸை ஆரம்பித்துவிட்டேன். தொடர்ந்த நாட்களில், வெடிங் கேக் ஆர்டர் களும் குவியத்துவங்கிவிட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick