கல்யாணம் `ஃபிக்ஸ்’ ஆயிடுச்சா... பல் டாக்டரைப் பாருங்க!

‘‘திருமணம் என்றவுடன், பட்டுப்புடவைகள், ஆபரணங்கள், அழகு சாதன உபகரணங்கள் என்று வெளிப்புற அலங்காரத்தில் கவனம் செலுத்துவது மட்டுமே போதாது. உடலின் ஆரோக்கியத் துக்கு அடித்தளம் இடும் பற்களின் மீது கவனம் செலுத்துவது, மிக முக்கியம்!’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த பல் சிறப்பு மருத்துவர், டாக்டர் வித்யா சபரி.

‘‘திருமணம் நெருங்கும் வேளையில், வாயில் துர்நாற்றம், கறை படிதல், பற்சொத்தை, சென்சிட்டிவ் பிரச்னை, பற்களுக்கிடையே இடைவெளி, எனாமல் பிரச்னை, கம்ஸ் பிளீடிங் என பற்களில் ஏற்படும் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மணமக்கள் நிச்சயம் பல் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். ஏனெனில், பற்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளால் ஒருவர் மற்றொருவருடன் பேசுவதில் தயக்கம் ஏற்படும். இணையுடன் நெருங்கும்போது, சமயங்களில் தயக்கம் தாழ்வு மனப்பான்மை வரை இழுத்துச் செல்லும். எனவே, திருமணத்துக்குக் காத்திருக்கும் மணமக்கள் குறைந்தது 6 மாதத்துக்கு முன்பாக பல் மருத்துவரை அணுகவேண்டும். தங்களுக்குள்ள பிரச்னைகளுக்கு ஏற்றவாறு மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்துவ வழிமுறைகளை ஏற்பதுடன், மருத்துவரின் அறிவுரையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick