ரகசியமும், தேடலும் !

ன்னதான் புதிய மாடல் நகைகள் வந்தாலும், பழமையான பாரம்பர்ய மாடல் நகைகளுக்கு என்றுமே தனி மதிப்புதான்! அந்த ஆன்டிக் நகைகள் கண்காட்சியை, வியக்கும் வண்ணம் நடத்தி முடித்துள்ளது, பிரின்ஸ் ஜுவல்லரி! 'புராதன ரகசியங்களைத் தேடி’ என்னும் பெயரில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த நகை கண்காட்சி இவ்வருடம் கதீட்ரல் ரோட்டிலுள்ள பிரின்ஸ் ஜுவல்லரியின் கிளையில், ஜூலையில் நடைபெற்றது. 

பிரின்ஸ் ஜுவல்லரியின் நிறுவனர்களான பிரின்ஸன் ஜோஸ் மற்றும் அவரது மனைவி ஷீபா பிரின்ஸின் பாரம்பர்ய நகைகளின் மீதான காதலின் வெளிப்பாடுதான், இந்தக் கண்காட்சி. காதணிகள், கழுத்து நகைகள், ஒட்டியாணம், வளையல், காப்பு, ராக்குடி, ஏழு கல் காதணி, பாம்படம், தந்தட்டி என பெண்களின் அணிகலன்கள் மட்டுமல்லாது ஆண்கள் நகைகளும் இந்தக் கண்காட்சியில் கவர்ந்தது. பழமை ப்ளஸ் நவீனம் கலந்த டிசைனர் நகைகள், மற்றுமொரு அட்ராக்‌ஷன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்