கல்யாண போட்டோ... பட்ஜெட் என்ன..?

திருமண நிகழ்வை உள்ளது உள்ளபடியே பதிவு செய்து காலத்துக்கும் அத்தருணத்தை நம் கண்முன் கொண்டுவரும் திருமண போட்டோகிராஃபியில் இப்போது பல வகைகள் வந்துவிட்டன.  திருமண போட்டோகிராஃபியில் என்ன மாதிரியான வகைகள் வந்துள்ளன, அவற்றுக்கான உத்தேசமான பட்ஜெட் என்ன என்பதை விளக்குகிறார், சென்னையில் உள்ள கேப்சரிங் போட்டோகிராஃபியின் உரிமையாளர் பார்த்திபன் ரவி, 'திருமணத்துக்கு வந்திருக்கும் விருந்தினர்களை மட்டும் போட்டோ எடுப்பது  ஓல்டு டிரெண்ட்.  திருமணத்துக்கு முன்னாடி எடுக்கும் ப்ரீ வெடிங் போட்டோகிராஃபி, திருமணத்துக்குப் பிறகு எடுக்கும் போஸ்ட் வெடிங் போட்டோகிராஃபி, முகூர்த்தம், ரிசப்ஷன், ஹனிமூன் ஷூட், யதார்த்தமாக ஷூட் செய்யும் கேண்டிட் போட்டோகிராஃபி, விவசாயி, மீனவர், சைனீஸ் இதுபோன்ற உடைகளில் கான்செப்ட் போட்டோகிராஃபி, தீம் போட்டோகிராஃபி, ஸ்டுடியோவில் எடுக்கப்படும் போர்ட்ஃபோலியோ போட்டோகிராஃபி என  திருமண போட்டோகிராஃபி நம்ம கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நாளுக்கு நாள் வளந்துட்டே போகுது' எனும் பார்த்திபன் ரவி தொடர்ந்து, 'இதுக்கு பட்ஜெட்னு பாத்தா... முகூர்த்தம் மற்றும் ரிசப்ஷனுக்கு எடுக்கப்படும் போட்டோ ஷூட் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ரூபாய் 50,000 முதல் கட்டணம் ஆரம்பமாகும். வீடியோ ஷூட்டுக்கு ஒரு நாளைக்கு 45,000 முதல் 60,000 வரை ஃபிக்ஸ் செய்யுவோம். இது ஒரு நாளில் நடைபெறும் திருமணங்களுக்கு மட்டும். இதுவே ரெண்டு மூணு நாள் நடக்கும் திருமணங்களுக்கு மெஹந்தி ஃபங்ஷன், சங்கீத் இப்படி அதில் நடக்கவுள்ள நிகழ்ச்சிகளைப் பொறுத்து ரேட் ஃபிக்ஸ் செய்வோம். இதே திருமணம் வெளியூரில் நடக்குதுன்னா போட்டோகிராஃபி, வீடியோகிராஃபி டீமுக்கு போக்குவரத்து, சாப்பாடு, தங்குற வசதி எல்லாமே திருமண வீட்டாரே செய்து தந்துடுவாங்க' எனும் பார்த்திபன், 'இதுதவிர சங்கீத், மெஹந்தி என அரை நாள் போட்டோ கவரேஜ் நிகழ்ச்சிகளுக்கு, 35,000 முதல் 45,000 ரூபாய் வரை செலவாகும். அதுவே ஒரு நாள் நிகழ்ச்சின்னா, 45,000 முதல் 60,000 வரை செலவாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick