ஸ்லிம், மீடியம், பப்ளி கேர்ள்ஸ்... யாருக்கு எது அழகூட்டும்?!

டிரெஸ் ஃபிட்

‘‘பெரும்பாலான பெண்கள், ஆடை, ஆபரண, அலங்கார விஷயத்தில் தங்களுக்குப் பிடித்ததைத் `டிக்’ செய்கிறார்களே தவிர, அது தங்களுக்குப் பொருந்துகிறதா என்று யோசிப்பதில்லை. இதனால் நிச்சயம், முகூர்த்தம் என விசேஷ தின அலங்காரத்தில் கோட்டைவிடுகிறார்கள். எனவே, எப்போதும் உடல் அமைப்பு, நிறம் என உங்கள் ஃபீச் சர்ஸின் அடிப்படையிலேயே ஆடை, ஆபரணம், அலங்காரத்தைத் தேர்ந் தெடுங்கள்!’’

- முக்கிய ஆலோசனை சொல்லும், சென்னை, அண்ணா நகர், மேற்கு ஷெனாய் நகர், ‘ஸ்டைல்ஸ் ஸ்டுடியோ’வின் உரிமையாளர் ராதா. ‘‘ஸ்லிம், மீடியம், பப்ளி என மூன்று வகை உடல்வாகுப் பெண்களும் அதற்கேற்ப தங்களை அழகுப் படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகளை, அதே உடலமைப்புகளைக் கொண்ட இந்த மூன்று மாடல்கள் மூலமாக விளக்குகிறார்.

ஒல்லி பியூட்டீஸ்!

புடவை

மாடல் அர்ச்சனா ஷர்மா, ஸ்லிம் அண்ட் ட்ரிம் பெண். ஃபுல் ஜரி முகூர்த்தப் பட்டுப் புடவைகள், இந்த உடல்வாகுக்கு அருமையாகப் பொருந்தி இன்னும் அழகு சேர்க்கும். இந்த உடல்வாகுப் பெண்கள் தாராளமாக ஃபேன்ஸி கற்கள் பதித்த ஹெவி வொர்க் புடவைகளை அணியலாம். டிசைனர் புடவைகள், இவர்களுக்கு பெர்ஃபெக்டாகக் கைகொடுக்கும். கலர் தேர்வைப் பொறுத்தவரை, டார்க் கலர்களை அள்ளலாம், லைட் கலர்களைத் தவிர்க்கலாம். ஃபுல் ஸ்லீவ் இவர்களை இன்னும் ஒல்லியாகக் காட்டும் என்பதால், ‘நோ’ சொல்லிவிடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick