ஊர் பேர் சொல்லும் ஸ்டார் ரெசிப்பிகள்! | Star Recipes - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

ஊர் பேர் சொல்லும் ஸ்டார் ரெசிப்பிகள்!

ரெசிப்பி

வ்வொரு ஊர் திருமணத்திலும் அந்த வட்டார பிரபல உணவு வகை ஒன்று, திருமண விருந்தில் நிச்சயம் இடம்பெறும். அந்த வகையில் லிபாஸ் கேட்டரிங் உரிமையாளர் செஃப் பழனிமுருகன் அளிக்கும்... தூத்துக்குடி, நெல்லை, தஞ்சாவூர் திருமண விருந்து மெனுவின் ஸ்டார் ரெசிப்பிகளை  இங்கே பார்ப்போம்...

தூத்துக்குடி தக்காளி ஜாம்

தேவையானவை:


தக்காளி  - அரை கிலோ

சர்க்கரை - 400 கிராம்

முந்திரி - 25 கிராம்

கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 50 கிராம்

நெய்  - 25 கிராம்

பேரீச்சை - 100 கிராம்

செய்முறை:

கடாயில் நெய் சேர்த்து, உருகியதும் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை கெட்டியாகும்போது, கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிய பேரீச்சை, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாக கிளறவும். பேரீச்சையை நன்கு கலந்து, கலவை ஜாம் பதம் வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick