மணமக்கள் விருந்து... பின்விளைவு தவிர்க்கும் கைடு! | Marriage Feast for New Couple - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

மணமக்கள் விருந்து... பின்விளைவு தவிர்க்கும் கைடு!

விருந்து

ணமக்கள் பொதுவாக திருமணத்துக்கு முன் டயட்டில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பின் உறவுகளும் நண்பர்களும் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு தொடர்ச்சியாக விருந்துவைத்து உபசரிக்க, அவர்களின் டயட் எல்லாம் காணாமல்போகும்; உடல் எடை எக்குத்தப்பாகக் கூடும்.

‘‘திருமணத்துக்குப் பிறகும் ஃபிட்னஸும், உடல் வனப்பும் நீடித்திருக்க உணவுக் கட்டுப்பாடு தேவை. குறிப்பாக, போஸ்ட் வெடிங் போட்டோகிராஃப் ஷூட்டுக்கு திட்டமிட்டிருப்பவர்கள், உணவு விஷயத்தில் நிச்சயமாக கடிவாளம் போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தும் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் குந்தலா ரவி, அதற்கான ஆலோசனைகள் தருகிறார் இங்கு...

‘‘விருந்து வைப்பவர்கள் தங்களின் பிரியத்தைக் காட்ட, இலை முழுக்க அயிட்டங்களை அடுக்கிவிடுவார்கள். அதைச் சாப்பிடவில்லை என்றால் மிகவும் வருந்துவார்கள். எனவே, அவர்களிடம் உங்களுக்குப் பிடிக்காத அல்லது எண்ணெய், கொழுப்பு காரணங்களால் நீங்கள் சாப்பிட விரும்பாத உணவுகளைப் பற்றி முன்கூட்டியே உரிமையுடன் சொல்லிவிடுங்கள். ‘ஃப்ரை, வறுவல்னு இல்லாம முடிந்தவரை குழம்பாவும், வேகவைத்த காய்கறிகளாவும் இருக்கட்டும்’ என்று அறிவுறுத்துங்கள். ‘இப்படியெல்லாம் முன்னாடியே சொன்னா என்ன நினைப்பாங்க?’ என்று யோசிக்க வேண்டாம். இலையில் வைத்த பதார்த்தங்களை நீங்கள் விரல்கூடப்படாமல் வீணாக்கினால்தான் அவர்கள் வருத்தப்படுவார்கள். இப்படி தேவையானதை விரும்பிக் கேட்பதை அவர்களும் விரும்புவார்கள்.

விருந்து நாட்களில் வீட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்லாமல், ஜூஸ், பழங்கள் என்று லைட்டாகச் சாப்பிட்டுக்கொள்ளலாம். விருந்தில் மெயின் சாப்பாட்டை சாப்பிட்டுக்கொள்ளலாம்.

விருந்தில் நாலு ஸ்வீட் வைத்தால், இரண்டு ஸ்வீட் சாப்பிடலாம். இரண்டு ஸ்வீட் இருந்தால், ஒரு ஸ்வீட்டுடன் நிறுத்திக்கொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick