ஆரத்தி தட்டு, சீர்வரிசை தட்டு... ஆஹா, அட்டகாசம்!

அலங்கார தட்டுகள்

முன்பெல்லாம் சீர்வரிசைக்கு, ஆரத்திக்கு எத்தனை தட்டு என்பதுதான் கவனிக்கப்படும். இன்றோ, அதை எப்படியெல்லாம் அலங்கரித்து வைக்கிறார்கள்தான் என்பதுதான் ட்ரெண்ட். அந்தளவுக்கு இவற்றில் புதுமைகள் புகுந்துகொண்டே இருக் கின்றன. அலங்கார சீர்வரிசை தட்டுகள் மற்றும் அலங்கார ஆரத்தி தட்டுகள் தயாரிப்பில் ஐந்து வருடங்கள் அனுபவம் உள்ள திவ்யா பேசுகிறார்...

‘‘சீர்வரிசைத் தட்டுகள், ஆரத்தி தட்டுகள், ஜுவல்ஸ் ஸ்டாண்ட் இவற்றை எல்லாம் மணவீட்டினருக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் வீட்டிலேயே வித்தியாசமாகத் தயாரிக்கலாம். தெர்மாக்கோல், பிளாஸ்டிக் கூடைகள், மரக்கூடைகள், ஸ்டோன், ஜரிகை, வெல்வெட் துணி போன்ற பொருட்களைக் கொண்டே சுலபமாக இவற்றைச் செய்ய முடியும். அல்லது, அனைத்தையுமே ரெடிமேடாக வாங்கிக்கொள்ளலாம்.

அலங்கார சீர்வரிசை தட்டுகள்!

முன்பெல்லாம் பித்தளை, சில்வர் தாம்பாளங்களில் சீர்வரிசைப் பொருட்களை அடுக்கி சபையில் வைத்தார்கள். இப்போது, அந்தத் தட்டில் இருந்து, அதில் வைக்கப்படும் பொருட்கள் வரை அழகும் கலையும் மிளிரச் செய்கிறார்கள். உதாரணமாக, பழங்களின் மீது சிறிய அலங்கார கற்கள், பெயின்ட்டிங், பேப்பர் கட்டிங், ஜரிகை, பூக்கள் என பழங்கள் வைக்கும் சீர் வரிசைத் தட்டு இவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தால், திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு, ‘அவங்க கல் யாணத்துல சீர்வரிசை தட்டு எவ்வளவு ஆர்ட்டிஸ்டிக்கா இருந்தது தெரியுமா?!’ என்று வெகுகாலத்துக்கு அது நினைவில் இருக்கும் இல்லையா... அந்த சிறப்புக்குத்தான் இவ்வளவு மெனக்கெடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick