ரம்மியமான சூழலில்... ரசனையுடன் டும் டும் டும்!

அவுட்டோர் வெடிங்

சூரிய உதயம் ஆரம்பிக்கும் அதிகாலை நேரம். பறவைகளின் ‘க்ரீச் க்ரீச் ‘சத்தம் மேள ஒலியாகவும், வண்டுகளின் ரீங்காரம் நாதஸ்வர முழக்கமாகவும் உருமாறி மங்கள கீதம் முழங்க... சிலுசிலு காற்றுடன் சேர்ந்து வீசும் பூக்கள் வாசத்தை சுவாசித்துக்கொண்டே மணக்க மணக்க மணம் முடித்தால்... ஆஹா, இதுவல்லவோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்!

“ மலைமலையாக காசை கொட்டி நடத்தப்படும் பிரமாண்ட திருமணங்களினால், ‘பொண்ணோட கல்யாணத்தை, ராஜா வீட்டு கல்யாணம் மாதிரி நல்லா கிராண்டா நடத்திட்டாரு’ எனும் உறவினர்களின் பாராட்டினால் திருப்தி கிடைக்குமே தவிர, நமக்கான ஆத்ம திருப்தி... நம் மனதுக்கு நெருக்கமான சூழலில் செய்யும் திருமணத்தில்தான் கிடைக்கும்’’ என்கிறார் சென்னை, மதுரவாயலில் அமைந்துள்ள `சிவ பார்வதி புஷ்பா கார்டன்ஸ்’ஸின் சீஃப் ஆபரேட்டிங் ஆபீசர் நிருபமா ரெட்டி.

“அந்தக் காலத்தில் வீட்டிலேயே நடத்தப்பட்ட கல்யாணங்கள்தான் அதிகம். காலப் போக்கில் திருமண மண்டபங்கள் உருவாக, அதன் பிறகு முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட ஹை டெக் மண்டபங்கள் என உருமாறி, இப்போது திருமண மண்டபங்களிலேயே... ஆனால், ‘தீம் வெடிங்’ எனும் கான்செப்ட் திருமணங்கள் நடக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்