'கெஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ்’... விருந்தினர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

விருந்தோம்பல்

திருமணங்களில் என்னதான் மணவீட்டார் சிரத்தை எடுத்து வேலை செய்தாலும், சமயங்களில் சில விருந்தினர்கள் தாங்கள் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்ற மனக்குறையுடன் நிகழ்வில் இருந்து கிளம்ப நேரிடும். அதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்க்க உதவுவதும், திருமணத்துக்கு வரும் ஒவ்வொரு விருந்தினருக்கும் உரிய வரவேற்பு, உபசரிப்பு, முக்கியத்துவம் அளிக்க ஏற்பாடு செய்வதும்தான், ‘கெஸ்ட் மேனேஜ்மென்ட்’. அந்த சர்வீஸில், விருந்தினர்கள் ஏ டு இஸட் எப்படி கவனித்துக்கொள்ளப்படுவார்கள் என்ற விவரங்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த `வொண்டர் வெடிங்’ திருமண ஏற்பாட்டு நிறுவன உரிமையாளர் ராஜ்குமார்.

* ‘‘எங்களிடம் வரும் கஸ்டமர்கள் அனைவரும், ‘மாப்பிள்ளை/பெண் வீட்டு விருந்தினர்களை மட்டும் பார்த்துக்கோங்க’ என்று தங்களுக்காக மட்டும் கேட்காமல், இருவீட்டு விருந்தினர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் கெஸ்ட் மேனேஜ்மென்ட் சேவை இருக்க வேண்டும் என்றுதான் கேட்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick