அசரவைக்கும் கொண்டாட்டங்கள்... ஆர் யூ ரெடி!

மேரேஜ் என்டர்டெய்ன்மென்ட்

ம் இல்லத் திருமணத்துக்கு வருகை தரும் விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், அவர்கள் அங்கு நமக்காக செலவிடும் நேரத்தை அவர்களும் கொண்டாடும்படி செய்யவும் ஏராளமான ‘வெடிங் என்டர்டெய்ன்மென்ட்’ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றைப் பற்றிச் சொல்கிறார், ஈவன்ட் மேனேஜ்மென்ட் துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சென்னையைச் சேர்ந்த கௌரி.

‘‘இன்று பலரும் தங்களின் இல்லத் திருமணத்தில் குறைந்தபட்சம் மூன்று என்டர்டெய்ன்மென்ட் நிகழ்ச்சிகளை நடத்த விரும்புகிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அப்படி நாங்கள் செய்துகொடுக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில், நிறைய பேர் விரும்பும் லிஸ்ட்டை இங்கு வழங்குகிறேன்.

போட்டோகிராஃபி

எங்கள் புரொஃபஷனல் போட்டோ கிராஃபர்களைக்கொண்டு, திருமண வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அவர்களுக்குப் பிடித்த வகையில் புகைப்படங்கள் எடுத்து, அதை உடனடியாக பிரின்ட் காப்பியாக அவர்களிடம் கொடுப்போம். இந்த என்டர்டெய்மென்டை விருந்தினர்கள் பெரிதும் விரும்புவார்கள்!

பென்சில் ஸ்கெட்ச் டிராயிங்

போட்டோகிராஃபர்களின் மூலமாக ஒவ்வொருவரையும் போட்டோ எடுத்து, அவர்களின் முகவரி, போன் நம்பரை வாங்கிக்கொள்வோம். பின்னர், அரங்கிலேயே புரொஃபஷனல் பெயின்ட்டிங் டீம் ஒன்றைக்கொண்டு, ஒவ்வொரு போட்டோவையும் பென்சில் ஸ்கெட்ச் டிராயிங்காக வரையவைப்போம். முடிந்த வரை விருந்தினர்கள் செல்வதற்குள் டிராயிங்கை முடித்து அவர்களிடம் கொடுத்துவிடுவோம். முடியாதபட்சத்தில், அவர்களின் முகவரிக்கு கொரியரில் அனுப்பிவைத்துவிடுவோம். போட்டோகிராஃபியைக் காட்டிலும், இந்த பென்சில் ஸ்கெட்ச் டிராயிங்க்கு அதிக வரவேற்பு உள்ளது.

ஸ்டால்

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஸ்டால்கள் அமைப்போம். குழந்தைகளுக்கான ஸ்டாலில் இருக்கும் விளையாட்டுகள், ஸ்நாக்ஸ் போன்றவற்றை என்ஜாய் செய்யும் குட்டீஸ், திருமண நிகழ்விலும் சடங்கிலும் பங்குபெற்றுக்கொண்டிருக்கும் தங்கள் பெற்றோர்களைத் தொந்தரவு செய்யாமல் ஆர்வமாக இங்கு விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதேபோல பெண்களுக்கான ஸ்டாலில் மெஹந்தி, நெயில் ஆர்ட், கோலம், மேக்கப் போன்றவற்றைச் செய்வோம். விருந்தினர் பெண்களின் மகிழ்ச்சியை இது பல மடங்கு அதிகரிக்கும்!

மேஜிக்

திருமண மேடையிலேயே நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் முன்னிலையில் மேஜிக் ஷோ நடத்துவோம். மேலும், ‘பெர்சனல் அட்ராக்‌ஷ’னாக ஆங்காங்கே விருந்தினர்களுக்கு அருகில் சென்று நம் மேஜிக் கலைஞர் செய்யும் ட்ரிக்ஸில், அவ்விடத்தில் அமர்ந்திருப்பவர்கள் ஆச்சர்யத்தில் குதூகலிக்க, அது திருமண அரங்கம் முழுக்க தொற்றிக்கொள்ளும்!

மியூசிக்

திருமண அரங்குகளில் இரவு 9.30 மணிக்கு முந்தைய நேரங்களில், ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். பெரும்பாலும் லைட் மியூசிக் மற்றும் பாடல்களை இன்ஸ்ட்ரூமென்ட்களில் மட்டும் இசைப்பது போன்றவற்றை விருந்தினர்கள் விரும்புகிறார்கள். மேலும், பிரபல பாடகர்களின் கச்சேரிகளையும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப செய்துகொடுக்கிறோம். மணமக்களை வாழ்த்தி விருந்தினர்களைப் பாடவைப்பது, மணமக்களையே பாடவைப்பது போன்ற ஜாலி நிகழ்வுகளும் இதில் இடம்பெறும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick