பழங்கால திருமணங்கள்... ஆச்சர்யக் குறிப்புகள்!

ஆராய்ச்சி

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த சமூகத்தில் பல்வேறு வகையான திருமணங்கள் நடப்பது இயற்கையே. இவற்றை கூர்ந்து கவனித்து, வகைப்படுத்தி பெயரிட்டு, பாராட்டுக்குரிய வகையில் இலக்கிய ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இதன்படி, பழங்கால வடஇந்தியாவின் ஆரிய நாகரிகத்தில்  வித்தியாசமான திருமண முறைகள் நடைமுறையில் இருந்தன. பிரம்மம், தெய்வம், அர்சம், பிரஜாவத்யம், காந்தர்வம், ராட்சஸம், அசுரம் மற்றும் பைசாஸம் ஆகிய இந்த எட்டு வகை திருமணங்களும் அக்கால சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இதில் எட்டாவது வகை வன்முறையானது. இவற்றைப் பற்றிய குறிப்புகள் வடமொழி இலக்கியங்கள், வரலாற்று நூல்கள் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன. ஆச்சர்யப்படுத்தும் அந்தக் குறிப்புகளில் ஏழு வகை மட்டும் இங்கே, சுருக்கமாக...

பிரம்மம்


தற்போது நாடு முழுவதும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படும் திருமணங்கள், அக்கால பிரம்மம் முறையில் வளர்ந்ததுதான். இதில், மணப்பெண்ணுக்கு ஸ்த்ரீ தனம் (தற்போது சீதனம்) வழங்கப்பட்டது. அதாவது மணப்பெண்ணான ஸ்த்ரீக்கு பெற்றோர் அளிக்கும் சொத்து, தனம். இதைப் பயன்படுத்தும் முழு உரிமை அந்த ஸ்த்ரீக்கு மட்டுமே உண்டு. இவரது அனுமதியின்றி அதை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது.

இந்த பிரம்மம் முறையில் அளிக்கப்பட்ட தனம், காலத்துக்கு ஏற்றபடி பல உருவங்கள் எடுத்தது. கால்நடைகள், பாத்திரங்களுடன் அடிமைகளும் தனமாக மணப்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட வரலாறு உண்டு. இந்த தனம், குப்தர்கள் காலத்தில் மணப்பெண்ணுக்கு ஆடை, அணிகலன்களாக வழங்கப்பட்டது. துவக்கக் காலத்தில் ஆரியர்கள் மட்டுமே பின்பற்றி வந்த பிரம்மம் வகை திருமணத்தை, காலப்போக்கில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சமூகத்தினரும் கடைப்பிடிக்கத் துவங்கினர். இன்றைய நடைமுறையில் பெரும்பாலும் இவ்வகை திருமணமே நிலைத்துள்ளது. ஆனால், மணமகளின் தன உரிமை மாப்பிள்ளை அல்லது அவரது வீட்டாரின் கைக்கு மாறியதுடன், இப்போது அது வரதட்சணை என அழைக்கப்படுகிறது.

தெய்வம்


தெய்வம் முறையில், தன் குடும்பத்தின் சமயப் பணிகளை செய்துவந்த பூசாரிக்கு தட்சணையாக தம் மகளையே பெற்றோர் மணம்செய்து வைத்தனர். இதில், சீதனம் தரும் வழக்கம் இல்லை. இந்த தெய்வம் திருமணங்கள் அதிக செலவின்றி மிகவும் எளிமையுடன் நடைபெற்றன. இவ்வகை திருமணத்தில் சமயச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் அம்முறை திருமணங்கள் ‘தெய்வம்’ என அழைக்கப்பட்டன. இதை பிராமணர்கள் அதிகமாக பின்பற்றி வந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

அர்சம்


பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெறும் மற்றொரு வகை திருமணத்தின் பெயர், அர்சம். இதில், சீதனம் முழுமையாக அளிக்கப்படவில்லை. எனினும், அதன் அடையாளமாக ஒரு எருது மணப்பெண்ணுக்கு பெற்றோர்களால் அளிக்கப்பட்டு வந்தது. இம்முறையை கால்நடை வளர்ப்பு, வியாபாரம் மற்றும் விவசாயம் செய்துவந்த வைசியர்கள் அதிகமாகப் பின்பற்றி வந்தனர். அர்சம் திருமணங்களும் எளிமையாகவே நடைபெற்றன.

பிரஜாவத்யம்

நான்காவது வகையான பிரஜாவத்யம் எனும் முறையும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டதாக இருந்தது. ஆனால், இந்த வகையில் சீதனம் என மணமகளுக்கு எதுவுமே தரப்படவில்லை. மேற்சொன்ன இந்த நான்கு வகை திருமணங்களை பிராமணர்களும் பின்பற்றி வந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick