நினைத்தாலே இனிக்கும் நியூசிலாந்து!

ஹனிமூன்

ப்ரல் மாதம். சுட்டெரித்த சென்னை வெயிலில் சூரிய பகவான் ஆசீர்வாதத்துடன், அழகாக நடந்தேறியது ஸ்நேகா ரெட்டி - ப்ரவீன் குமாரின் திருமணம்.

‘‘கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் ஆனதுக்கு அப்புறம்தான் ஹனிமூன் போனோம். ஜூன் 4 - ஜூன் 14... இந்த 10 நாட்களும் எங்க ஆயுளுக்கும் மறக்க முடியாதது’’ என்று மகிழ்ச்சியில் மிதக்கிறார் புதுப்பெண் ஸ்நேகா. இந்த ‘புதுசா கட்டிக்கிட்ட ஜோடி’ தேன் நிலவுக்கு சென்று வந்திருப்பது... நியூசிலாந்துக்கு!

‘‘நியூசிலாந்து சாலைகளில் நாம் பயணிக்க வேண்டியது மனிதர்களோடு இல்ல, மாடுகளோடதான். அட, உண்மைதாங்க. ரோடு முழுக்க செம்மறியாடு, மாடு ராஜ்யம்தான். மனுஷங்களை கண்ணுல பார்க்கிறதே அபூர்வமா இருந்துச்சு’’ என்று சிரிக்கிறார் ப்ரவீன். இவரது தேர்வுதான், நியூசிலாந்து. ‘‘செல்ஃப் டிரைவ் செய்துட்டு ஊர்முழுக்க சுத்துற மாதிரி ஒரு ஹனிமூன் ஸ்பாட் தேடினப்போ, நியூசிலாந்தில்தான் அதுக்கு அனுமதி கிடைக்கும்னு தெரிஞ்சது. அதான் அங்க பறந்துட்டோம்’’ என்ற தம்பதி, அந்தப் பயண நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்...

எப்படி போகலாம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick