ப்ரீ வெடிங் போட்டோகிராஃபி... கவனியுங்கள் இவற்றை! | Pre wedding photography - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

ப்ரீ வெடிங் போட்டோகிராஃபி... கவனியுங்கள் இவற்றை!

வெடிங் போட்டோகிராஃபி

ப்போதைய திருமண ட்ரெண்டில் சுவாரஸ்யமானது, திருமணத்துக்கு முன் மாப்பிள்ளையும், பெண்ணும் இண்டோர், அவுட்டோர் என காஸ்ட்யூம், தீம் போன்றவற்றை திட்டமிட்டு புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ப்ரீ வெடிங் போட்டோகிராஃபி (Pre Wedding Photography). அதைப் பற்றிய தகவல்கள் தருகிறார், சென்னை ‘ஃபோகஸ் ஸ்டூடியோ’வின் உரிமையாளர் சந்துரு பாரதி.

ப்ரீ வெடிங் போட்டோகிராஃபி... சூப்பர் சாய்ஸ்!


``இதுவரை நாங்கள் 70-க்கும் மேற்பட்ட ப்ரீ வெடிங் ஷூட்ஸ் எடுத்திருக்கிறோம். என் அனுபவத்தில் சொல்கிறேன்... திருமணத்துக்குப் பின் எடுக்கும் போஸ்ட் வெடிங் போட்டோ கிராஃபியைவிட, முகூர்த்தத்துக்கு முன்னரே மாப்பிள்ளையும், பெண்ணும் சந்தித்துக்கொண்டு, சேர்ந்து எடுத்துக்கொள்ளும் ப்ரீ வெடிங் போட்டோகிராஃபி, இன்னும் அழகான ரிசல்ட் கொடுக்கும். ஏனெனில், திருமணத்துக்கு இரண்டு வாரங்களுக்குப் பின் ஷூட் செய்யும் போது மணமக்களிடம் உற்சாகம் குறைந்துவிடும். அதுவே மணநாளுக்கு முன்னரே எடுக்கும்போது ரொமான்ஸும், கெமிஸ்ட்ரியும், எனர்ஜியும் ஹை லெவலில் இருக்கும். எனவே, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, நாங்கள் பரிந்துரைப்பது ப்ரீ வெடிங் போட்டோகிராஃபியே!

மாப்பிள்ளைதான் அதிகமாகக் கூச்சப் படுவார்!

பொதுவாக, மணப்பெண்கள்கூட விரைவில் வெட்கத்தை சமாளித்து ஷூட்டுக்கு ரெடியாகிவிடுவார்கள். ஆனால், மாப்பிள்ளைகள்தான் எவ்வளவு சொன்னாலும் கூச்சம், வெட்கம் கைவிட மாட்டார்கள். அதை மறைக்க, அவர்களுக்கு ஒரு கூலர்ஸ் போட்டுவிடுவோம். சில தம்பதிகள், எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், கூச்சத்தை மீறி போஸ் கொடுக்க மாட்டார்கள். சாப்பிடும்போது, வாக் போகும்போது என அவர்களுக்கே தெரியாமல் கேண்டிட் ஷூட் ஆக எடுத்துவிடுவோம்.

இண்டோர்... அவுட்டோர்!

நாங்கள் விரும்புவது அவுட்டோர் போட்டோ ஷூட்தான். அங்குதான் விதம்விதமான, வித்தியாசமான ஐடியாக்களில் புகைப்படங்கள் எடுக்கலாம். முக்கியமாக, லைட்டிங் பிரச்னை இருக்காது. அதுவே இண்டோர் எனில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் லைட்டிங் பற்றி யோசிக்கவே முடியாது. ஆடை, அலங்காரம் மிகவும் சரியாக இருந்தால்தான், இண்டோர் ஷூட் நன்றாக இருக்கும். அவுட்டோரை பொறுத்தவரை, ஆடை - அலங்காரத்துடன் சுற்றுச்சூழலும் புகைப்படங்களின் அழகைக் கூட்டும். 

தீம்தான் அடிப்படை!

நாங்கள் ஒவ்வொரு தம்பதிக்கும் புதுப்புது கான்செப்ட்டில் ஷூட் எடுக்கதான் விரும்புவோம். ஆனால், வரும் கஸ்டமர்கள், எங்களிடம் உள்ள கேட்டலாக் ஆல்பத்தைப் பார்த்துட்டு, அதில் ஏதாவது ஒரு கான்செப்ட்டை தேர்ந்தெடுத்து, அதேபோல தங்களுக்கும் செய்துதரச் சொல்லிக் கேட்பார்கள். ஆனால், அதைத் தவிர்த்து ஒவ்வொருவருக்கும் பிரத்யேகத் தன்மையுடன் ஷூட் செய்து கொடுப்பதே எங்கள் விருப்பம். சில ஜோடிகளுக்கு போட்டோகிராஃபிக்கான தீம் பற்றி நாங்கள் சில ஐடியாக்கள் சொல்லும்போது, அவர்களும் அவர் களின் ஐடியாக்களைச் சொல்வார்கள். அப்போது வேலை செய்ய ஆர்வமாக இருக்கும். தீம் அடிப்படையில்தான், இடம், ஆடை, அலங்காரம் என அனைத்தையும் முடிவு செய்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick