புன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்!

அலங்காரம்

திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என திருமணம் சார்ந்த அனைத்து சுப நிகழ்வுகள் நடைபெறும் மண்டபங்களிலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நம் விருந்தினர்கள் அனைவரையும் வாசலில் இருந்தே வரவேற்கிறது ஃப்ளவர் டெகரேஷன். ஃப்ளவர் டெகரேஷனில் உள்ள  இன்றைய ட்ரெண்ட் பற்றி பேசுகிறார்கள் சும்யோக் (sumyog) வெடிங் பிளானரின் உரிமையாளர்களும், இத்துறையில் பத்து ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களுமான ரேகா ரங்கராஜ் மற்றும் வித்யா சிங்.

“முன்பெல்லாம் கல்யாண வீடுகளில் பெரும்பாலும் மல்லிகைப்பூ, சாமந்திப்பூவைக் கொண்டு அலங்காரம் செய்திருப்பார்கள். ஆனால், தற்போது ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப குறைந்த விலையில் துவங்கி அதிக விலை கொண்ட மலர் அலங்காரங்களினால் மண்டபத்தின் அழகைக்கூட்டி, விருந்தினர்களின் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்கின்றனர்” என பேசத் துவங்கினார் ரேகா ரங்கராஜ். ‘‘பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எங்கேயும் பார்த்திராத வித்தியாசமான வண்ணங்களிலும், வடிவங்களிலும் ஃப்ளவர் டெகரேஷன் செய்து தரும்படி கேட்கிறார்கள். அதோடு எங்களிடம் வரும்போதே, ஐடியாக்களுக்காக நிறைய போட்டோ கலெக்‌ஷன், கொண்டுவர்றாங்க. அதோடு சேர்த்து தேவைக்கேற்ப எங்க ஐடியாவை சொல்வோம். இறுதியாக கல்யாண மண்டபத்தின் அமைப்புக்கு ஏற்ற வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான பூக்களை வரவழைப்போம். காலையில் நடைபெறும் தாலி கட்டும் வைபவம் மற்றும் மாலை நேரங்களில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சி என ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனிப்பட்ட முறையிலான மலர் அலங்காரங்களை செய்துகொடுக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick