இது பொம்மைக் கல்யாணம்!

பொம்மைகள்... நம் பால்ய பருவத்தை அழகாக்கியவை. பெண்கள் பலரின் பதின்ம வயதுகளில் இருந்த தனிமையைத் தனது இருப்பால் நிறைத்தவை. அவை நம் கைகளில் இருந்து இறங்கிச் சென்ற பின்புதான் அவற்றின் அருமையை நாம் உணர்ந்திருப்போம். அந்தக் காலத்தில் மக்களுக்கு  சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது, மணப்பெண்ணாகப் புகுந்த வீட்டுக்குச் செல்லும் சிறுமிகளுக்கு  ‘மரப்பாச்சி பொம்மை’களைப் பிறந்த வீட்டிலிருந்து கொடுத்துவிடுவார்கள். அந்தப் பொம்மைகளுக்குத் தாவணி கட்டி, கண்ணுக்கு மையிட்டு, நெற்றியில் பொட்டு வைத்து, தன் குழந்தையைப் போல் பாவித்து விளையாடுவார்கள் அந்தச் சிறுமிகள். குடும்ப உறவுகளைச் சித்திரிக்கும் வண்ணம் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, கணவன், மனைவி என பொம்மை செட்டுகளாகவும் இருக்கும். அன்றாடம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே பொம்மைகளாக வைத்து விளையாடுவார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick