‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’ | Mappillaiswamy - Veezhinathar Temple - Thiruvarur - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’

ந்து மத திருமணச் சடங்கில் முக்கியமாக இடம்பெறும் பந்தற்கால், அரசாணிக்கால் ஆகியவை கர்ப்பக்கிரகத்தில் அமைந்து, இறைவன் பார்வதியை மணம்புரிந்த திருமணக்கோலத்தில் காட்சித் தரும் ஒரே தலம் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே உள்ள திருவீழிமிழலை திருத்தலம்தான். அழகிய மாமுலையம்மை உடனாய அருள்மிகு வீழிநாதர் வீற்றிருக்கும் இக்கோயில், சோழநாட்டுக் காவிரித் தென்கரை தலங்களில் 61-வது தலமாக போற்றப்படுகிறது. ‘மாப்பிள்ளை சுவாமி’ என்று அழைக்கப்படும் இங்குள்ள வீழிநாதரின் திருவுருவமே தமிழகத்தில் மிகப் பெரியது என்று சொல்லப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல்பெற்ற தலமாகும். சேந்தனாரின் ‘திருவிசைப்பா’, அருணகிரிநாதரின் ‘திருப்புகழ்’, ஞானதேசிகரின் ‘பிள்ளைத்தமிழ்’, காளமேகப் புலவரின் ‘தனிப்பாடல்’ என பலராலும் போற்றப்பட்ட இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதனக் கோயில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick