தேவதைப் பெண்ணே!

மேக்கப்

நிச்சயம் முடித்த பெண்ணைப் பார்க்கும் அனைவரும் முதலில் சொல்வது ‘முகத்துல கல்யாணக்களை வந்துடுச்சு...’ என்பதுதான். அப்படிப் பட்ட களையான முகத்தை மேலும் மெருகூட்டுவதுதான் மேக்கப் கலைஞர்களின் திறமை. முன்பெல்லாம் பியூட்டி பார்லர்களுக்குச் சென்று மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதுபோல் இல்லாமல், மண மகளுக்கென தனித்துவமாக அலங்காரம் செய்வதற்கென மட்டுமே மேக்கப் செய்யக்கூடிய நிபுணர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் மணநாளை எதிர்கொள்ளவிருக்கும் பெண்களிடையே அதிக வர வேற்பைப் பெற்றிருக்கும், சென்னையைச் சேர்ந்த ‘பிரைடல் மேக்கப்’ கலைஞரான இப்ராஹிம்... திரைப்படங்கள், விளம்பரப்படங்கள் என இத்துறையில் அவர் வந்த பாதை மற்றும் மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் மேக்கப் சூட்சுமங்கள் என அனைத்தையும் பகிர்கிறார்...

“நான் முதன்முதலா விளம்பர ஷூட்டிங்கில் வலம் வரும் மாடல் களுக்கான மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாதான் என்னோட கரியரை ஆரம்பிச்சேன். நிறைய ஜுவல்லரி அட்வர்டைஸ்மென்ட்டுக்கு மேக்கப் கலைஞரா வேலை செய்யும்போது, அதில் நடிக்கும் மாடல் அப்படியே கல்யாணப்பொண்ணாவே மாறிவிடும் அளவுக்கு என்னோட வேலை இருக்கறதா எல்லாரும் பாராட்டுவாங்க. அப்பதான் ‘நாம ஏன் ரியல் லைஃப் மணமகளுக்கான மேக்கப் கலைஞரா ஆகக்கூடாதுன்னு யோசிச்சேன். டி.வி-யில் மட்டும்தான் பெண்கள் ஜொலிக்கணுமா என்ன?  அதே ஜொலிப்பை திருமணநாளில் மணமகளுக்கு கொடுக்கணும்’னு நினைச்சு களம் இறங்கி கிட்டத்தட்ட 17 வருஷம் ஆகிடுச்சு” எனும் இப்ராஹிமின் தந்தை 48 வருடங்களாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றியிருக்கிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick