அன்பு மனங்களில் ஆயிரம் கேள்விகள் | Couples Counselling Before Marriage - Aval Manamagal | அவள் மணமகள்

அன்பு மனங்களில் ஆயிரம் கேள்விகள்

ரிலாக்ஸ் ப்ளீஸ்...

முகம் அறியாத இருவர் திருமணம் எனும் பந்தத்தில் நுழைந்து ஓருயிராவது அவ்வளவு எளிதல்ல.  தனக்கு மனைவியாக வருபவளை சக மனுஷியாக நடத்த வேண்டிய கடமை ஒவ்வோர் ஆணுக்கும் உள்ளது. அதேபோல, புகுந்த வீட்டு உறவுகளோடு பாசப்பிணைப்பு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது. எவ்வளவுதான் முற்போக்குப் பேசி யதார்த்தமாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் இயல்பாக ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் அடங்கியிருக்கும் அந்த மிருகம் எப்போதாவது தலைகாட்ட ஆரம்பித்துவிட்டால் அதன்பின் அந்தத் திருமண வாழ்வே நரகமாகிப் போகும்.

தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் வளர்ச்சி ஆண் பெண் இடையிலான இடைவெளியைக் குறைத்துள்ளது. திருமணம் நிச்சயமான உடனேயே இதயம் இடம் மாறுவதற்கு முன்பாகக் கைபேசி எண்கள் இடம்மாறுகின்றன. முகநூல் பக்கம், வாட்ஸ்அப் என அவர்கள் வம்பளந்து விளையாட பல தளங்கள் உள்ளன. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் இந்தத் தளங்களே இன்றைய அளவுகோலாக உள்ளது. ஒருவரது முகநூல் பக்கத்தில் உள்ள பகிர்வுகளை வைத்தே அவரது கேரக்டரை முடிவு செய்யும் ட்ரெண்ட் இப்போதைய திருமணங்களில் இயல்பாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick