மணக்கோலம் காண வேள்விக்குடிக்கு வாங்க! | Kalyanasundareswarar Temple, Thiruvelvikudi - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

மணக்கோலம் காண வேள்விக்குடிக்கு வாங்க!

தெய்வீகம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்துள்ள திருவேள்விக்குடி, திருமண வரம் அருளும் திருத்தலமாகத் திகழ்கிறது. கி.பி 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கோயிலில் சிவபெருமான் திருமணக் கோலத்தில் உமையவளின் திருக்கரம் பற்றி, மணவாளேசுவரராக அருள்புரிகிறார். அம்பிகையின் திருப்பெயர் பரிமளசுகந்தநாயகி.

ஒருமுறை சிவபெருமானும் திருமாலும் சொக்கட்டான் ஆடுகின்றனர். ஆட்டத்துக்கு நடுவராக இருந்தவர் அம்பிகை. அப்போது, பகடைக்காய் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் எழுந்தபோது, அம்பிகை திருமாலுக்கு ஆதரவாகப் பேசுகிறார். இதனால் கோபம்கொண்ட சிவபெருமான், அம்பிகையைப் பசுவாக மாறிவிடும்படி சபித்துவிடுகிறார். ஐயனின் சாபத்தின்படி பசுவாகப் பிறந்த அம்பிகை, இந்தத் தலத்தில் சாப விமோசனம் பெற்றதுடன், பரத முனிவரின் மகளாகப் பிறந்து, தவமிருந்து சிவபெருமானை மணம்புரிந்த திருத்தலமும் இதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick