அழகே... ஆரோக்கியமே!

பொலிவு

திருமணத் தேதி தெரிந்த மணமகளின் மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மகிழ்ச்சி, பதற்றம், படபடப்பு எனச் சாப்பிடவும் தூங்கவும் தோன்றாமல் தன்னை மறந்த மனநிலையில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். கூடவே திருமண நாளில் ஜொலிப்பதற்காக அதிகம் மெனக்கெட ஆரம்பிப்பார்கள். விழாவின் தேவதையாக மணமேடையில் அமரப் போகிறவள் தன் சருமம், தோற்றம், ஆரோக்கியம் என அனைத்திலும் கவனம் செலுத்தியாக வேண்டும். பார்த்துப் பார்த்துத் தோற்றத்தை மெருகேற்றும் மணப்பெண் திருமணத்துக்குப்பின் அப்படியே மாறிவிடுவார். புகுந்த வீட்டு உணவு, உறவினர்கள் அளிக்கும் விருந்து, மகிழ்ச்சி, பூரிப்பு என ஒரு சுற்று எடை கூடி விடுவார். புது மணமகளாக இருக்கும் பெண்களுக்காகத் திருமணத்துக்கு முன் - பின் எனக் கடைப்பிடிக்க வேண்டிய டயட் குறித்து விளக்குகிறார், சேலம் ‘ஈட் ரைட்’ டயட் கிளினிக் உணவு ஆலோசகர் அபிராமி வடிவேல்குமார்.

ஒவ்வொரு பெண்ணும் இந்த உணவு முறையைப் பின்பற்றினால் முகத்திலும் சருமத்திலும் பொலிவைக் கூட்டலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick