பிக் பாஸ் - பாகுபலி - கான்செப்ட் போட்டோ ஷூட்

ட்ரீம் வெடிங்

பெரியவர்கள் திருமண ஏற்பாடுகளை ஜரூராகக் கவனித்துக்கொண்டிருக்க, மணமக்கள் தங்களின் திருமணத்தையொட்டிய கனவுகளை நனவாக்கும் வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் நிற்கிறார்கள் சென்னை, அரும்பாக்கத்தில் இருக்கும் ‘ஈஸி வெட்’ நிறுவனத்தைச் சேர்ந்த தீபக் மற்றும் பானுசந்தர். “ரியல் லைஃப் ஹீரோ, ஹீரோயின்களின் கனவுகளை நிஜமாக்கித் தருவது மட்டுமில்லாமல், அவர்களின் க்யூட் தருணங்களை போட்டோ, வீடியோ எனக் காலத்துக்கும் நிலைத்துநிற்கும் பொக்கிஷமாக்கித் தருவதுதான் எங்களின் சவால்’’ என்கிறார்கள் கிராமப் பின்னணியிலிருந்து வந்த இவ்விரு இன்ஜினீயர்களும். மூன்று வருடங்களாக வெடிங் மேனேஜ்மென்ட் துறையில் கால்பதித்து வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“நாங்க சமீபத்தில் முடித்த புராஜெக்ட் இது. மணமகன் வெளிநாட்டில் வேலை பார்த்துட்டிருந்தார். கிராமத்துப் பாரம்பர்யத்துடன் தன்னோட திருமணம் நடக்கணும்னு விருப்பப்பட்டார். திருமணத்துக்கு ஐந்து நாள்களுக்கு முன்தான் அவரால இங்கே வர முடியும் என்ற சூழ்நிலை. அவர் வந்ததுக்கு அப்புறம் அசுர வேகத்தில் மணமக்கள் ஆடைகள், நகைகள், மேக்கப், திருமண மண்டப அலங்காரம் உள்ளிட்ட அத்தனை ஏற்பாடுகளையும் ஐந்தே நாள்களுக்குள் செய்து கொடுத்தோம். மகிழ்ச்சி வெள்ளம் பெருகியது, அந்த மணவீட்டாருக்கு’’ என்கிறார் பானுசந்தர் பெருமையுடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick