மெஹந்தி - கதை சொல்லும் கரங்கள் | Bridal Mehndi Designs - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

மெஹந்தி - கதை சொல்லும் கரங்கள்

யாழ் ஸ்ரீதேவி, படங்கள்: எம்.விஜயகுமார் மாடல்: கனுஷ்யா

சை, காதல், வெட்கம் என மணப்பெண்ணின் கரங்களில் படர்ந்திருக்கும் மருதாணியின் சிவப்புக்குள் ஒளிந்திருக்கும் கதைகள் ஆயிரம். திருமணத்துக்கு முன்பு மணப்பெண்ணுக்கு இடும் மருதாணி, கால மாற்றத்தில் மெஹந்தி விழாவாகக் களைகட்டியிருக்கிறது. அதனால் மெஹந்தி கலைஞர்களுக்கென ஒரு தனி டிமாண்டே உள்ளது. இதற்கென அழகுக்கலையில் ஒரு தனி வகுப்பே எடுக்கின்றனர். பொழுதுபோக்காக மெஹந்தி வரைய கற்றுக்கொண்டவர்கள் மெஹந்தியை எப்படி போடுவது என முறைப்படி கற்றுக்கொண்டு மெஹந்தி கலைஞர்களாக உருவெடுத்துள்ளனர். இந்த வரிசையில் சேலத்தில் உள்ள ஃபரானா அஜ்மலும் வெற்றிகரமான மெஹந்தி கலைஜராக வலம்வருகிறார். இவருடைய மெஹந்தியின் சிறப்பு என்னவென்றால், மணப்பெண்ணின் கைகளில் மெஹந்தி வரையத் தொடங்கும்போதே அவர்களின் காதல் கதையைக் கேட்டுக்கொண்டே அதை அப்படியே மெஹந்தியில் வரைந்து அசத்துகிறார். அதுவும் கான்செப்ட் வெடிங்காக இருந்தால் கேட்கவே வேண்டாம்.

இனி ஃபரானா... “நான் கோவைப் பொண்ணு. ஹிந்துஸ்தான் காலேஜ்ல எம்.பி.ஏ முடிச்சேன். காலேஜ்ல நடந்த மெஹந்திப் போட்டியில கலந்துகொண்டு வாங்கின பரிசுதான் எனக்குள்ள இருந்த மெஹந்தி தாகத்தைக் கிளப்பிவிட்டது. மருதாணி கோன்களின் உதவியால் தோழிகளோட கரங்களை எனக்கான ட்ரெயினிங் இடமாகத் தேர்ந்தெடுத்துப் புகுந்து விளையாடுவேன். படிப்பு முடித்து வேலைக்குச் சேர்ந்த இடத்திலும் `மெஹந்தி ஃபரானாவா’ பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடும் அளவுக்கு என் கைவண்ணம் பரவ ஆரம்பித்தது. மெஹந்தி போடறதை நான் விடக்கூடாதுன்னு அவங்க உசுப்பேத்தி விட்டதாலதான் இன்னிக்கு நான் ஒரு மெஹந்தி ஸ்பெஷலிஸ்ட்டா உங்க முன்னாடி நிக்குறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick