டிப்ஸ்

யாழ்ஸ்ரீதேவி

ன்றைய காலகட்டத்தில் திருமணம் சார்ந்து நிச்சயதார்த்தம், முகூர்த்தம், ரிசப்ஷன், சங்கீத், காக்டெய்ல் பார்ட்டி எனத் திருமணத்துக்கு முன்னும் பின்னும் பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எடுக்கப்படும் புகைப்படங்களைத் தொகுக்கும்போது, ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான தோற்றத்தில் வலம் வருவதற்கு  நாம் உடுத்தும் உடை முக்கியப் பங்கு வகிக்கிறது. மணப்பெண்ணின் வார்ட்ரோப்பில் இருக்க வேண்டிய உடைகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் தர வேண்டும்; தனித்துவமாகத் தெரிவதற்கு எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் மலர் விக்ரம் வழங்கும் குறிப்புகள்...

* வழக்கமான பச்சை, சிவப்பு, மெரூன் போன்ற வண்ணங்களைத் தாண்டி, வித்தியாசமான நிறங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுபோன்ற இந்திய வண்ணங்களில் இருந்து மாறி ‘பேஸ்ட்டல்’ வண்ணங்களைப் பயன்படுத்தும்போது மணப்பெண் தனித்துத் தெரிவார். 

பாரம்பர்யமான கோல்டன் மற்றும் அடர்வண்ண முகூர்த்த சேலைகளைக் கட்டினாலும், அதைக் கட்டும் விதத்தில் வித்தியாசம் காட்டுவதுடன் பிளவுஸ் டிசைனில் பியூஷன் செய்யலாம். உயரம், சரும நிறத்துக்கு ஏற்ப பிளவுஸ் டிசைன் இருப்பது அவசியம்.

பேஸ்ட்டல் வண்ணச் சேலைகளுக்கு ஒருமுறை அதற்கு மேட்சான பிளவுஸும், வேறொரு நிகழ்ச்சியில் கான்ட்ராஸ்ட் நிற பிளவுஸும் என வித்தியாசப்படுத்தி அணியும்போது, ஒரே சேலையாக இருந்தாலும் ஒவ்வொரு சூழலிலும் உங்களைப் புதிதாக உணரவைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick