கன்னிகாதானம் - அம்மாவின் மடியிலே அழகிய திருமணம்

ஆ.சாந்தி கணேஷ், படங்கள்: ‘Shot Stories by Varun Suresh’

ந்தலில் சுற்றிக்கிடக்கிற கொடியின் அத்தனை மல்லிகைகளும் ஒற்றை கணத்தில் மலர்ந்ததைப் போல பூரித்துப்போயிருக்கிறார் ராஜேஸ்வரி. இவர், ‘மகளை  மடியில் இருத்தி, கன்னிகாதானம் செய்துகொடுத்த தமிழ்ப்பெண்’. தற்போது ஆஸ்திரேலியாவில் வேலைபார்த்து வருகிறார்.

‘`என் மகளை நான்தான் கன்னிகாதானம் செய்துதரப் போகிறேன் என்று முடிவெடுத்தவுடனேயே, எனக்கு முன்னால் யாராவது ஓர் அம்மா தன் மகளை  கன்னிகாதானம் செய்து கொடுத்திருக்கிறாரா என்று  கூகுளில் தேடினேன். ஆனால், அப்படி யாருமே இதுவரை செய்யவில்லை என்று தெரிந்ததும் என்னை அறியாமல் ஒரு சந்தோஷம் தொற்றிக்கொண்டது; கூடவே பதற்றமும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick