பட்ஜெட் - கடன் வாங்கியும் கல்யாணம் பண்ணலாம்!

திருமகள்

“எல்லா பெற்றோர்களும் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றவே பாடுபடுகிறார்கள். குழந்தைகளின் கனவுகள் சிறியதாகவோ, பெரியதாகவோ  இருக்கக்கூடும். அது எப்படி இருந்தாலும் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதே பெற்றோரின் இலக்காக இருக்கிறது. அதிக செலவு வைக்காத சிறிய கனவுகளை எளிதில் நனவாக்கிவிடலாம். அதிக பணம் தேவைப்படக்கூடிய பெரிய கனவுகளை எப்படி நிறைவேற்றுவது? கவலை வேண்டாம்... முறையாகத் திட்டமிட்டால் எந்தக் கனவையும் நிஜமாக்கிவிட முடியும்” என்று நம்பிக்கை அளிக்கிற நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன், திட்டமிடல் பற்றி விளக்குகிறார்.

“பட்ஜெட் போட்டு வாழும் ஒவ்வொரு குடும்பமும், குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கான முதலீட்டையும் பட்ஜெட்டுக்குள் கொண்டுவரவேண்டும். இதற்கு எப்படி திட்டமிடுவது?
திருமண செலவு என்பது மூன்று நிலைகளை உடையது.

திருமணம் நிச்சயதாரத்த செலவு

திருமண நிகழ்வுச் செலவு

திருமணத்துக்குப் பின் ஏற்படக்கூடிய செலவு

இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் திருமண செலவு. இந்தச் செலவுகள் அனைத்தும் பணவீக்கத்துக்கு உட்பட்டவையே. இதில் உணவு சார்த்த பணவீக்கம் சுமார் 7% ஆக இருக்கும். உடை, மலர், மண்டபம், சீர்வரிசை என மற்றச் செலவுகளில் 9% முதல் 12% பணவீக்கம் இருக்கக்கூடும். நம்மில் பலர் பணவீக்கத்தைக் கருத்தில் கொள்வதில்லை. ஆனால், இனிவரும் காலங்களிலாவது பண வீக்கத்தையும் கணக்கில்கொண்டு திட்டமிடுதல் அவசியம்.

பொதுவாக பிள்ளைகள் திருமண வயதில் அடியெடுத்து வைக்கும்போதுதான் இதுபற்றி யோசிக்கிறோம். ஆனால், குழந்தை பிறந்தவுடனேயே திட்டமிடுதலைத் தொடங்கிவிட வேண்டும். குழந்தையின் 5,10,15,20-வது வயதுகளில் திட்டமிடுதலை தொடர வேண்டும். பிள்ளை வேலைக்குச் சென்ற பிறகும் திட்டமிடுதல் அவசியம். இந்த மூன்று நிலைகளையும் அவசியம் பின்பற்ற வேண்டும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick