உணர்ச்சிகள் | Wedding photography by the memory writers studio - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

உணர்ச்சிகள்

சு.சூர்யா கோமதி

கேண்டிட் போட்டோகிராபி, போஸ்ட்வெடிங் போட்டோகிராபி, அவுட்டோர் போட்டோகிராபி, அண்டர்வாட்டர் போட்டோகிராபி என வெடிங் போட்டோகிராபியில் வெரைட்டிகள் பெருகிவருகின்றன. இந்த வரிசையில் உணர்ச்சிகளால் பேசும் படங்களைத் தன் கேமராவில் க்ளிக் செய்துகொடுப்பது ‘தி மெமரி ரைட்டர்ஸ் ஸ்டுடியோ’ நிகிதாவின் ஸ்பெஷல். அவருடைய ஒவ்வொரு புகைப்படமும் உணர்ச்சிகளால் ஆயிரம் வார்த்தைகள் பேசுகின்றன. அவரிடம் பேசினோம்.

‘`எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர். எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் படிச்சேன். அமெரிக்காவில் ஒரு வருஷம் சஸ்டைனபில் இன்ஜினீயரிங் முடிச்சேன். என் காதல் கணவர் ஒரு போட்டோகிராபர். காதலிக்கும்போது பெரும்பாலும் போட்டோகிராபி பற்றி தான் பேசியிருக்கோம். சொன்னா நம்பமாட்டீங்க, ஆன்லைன் கால்ல நாங்க பேசிக்கிறப்போகூட புரஃபஷனல் கேமராவை பயன்படுத்துறதில் இருந்து போட்டோ எடுக்கிறதுவரை எனக்குச் சொல்லிக் கொடுப்பார். போட்டோ கிராபியில் எனக்கும் ஆர்வம் வந்தது இப்படித்தான். ஆரம்பத்தில் ஸ்ட்ரீட் போட்டோகிராபிதான் பண்ணிட்டு இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம், எங்க உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வை போட்டோ எடுக்கப்போன என் கணவருடன் நானும் உதவிக்காக என் கேமராவை எடுத்துட்டுப் போனேன். திருமணத்தின் முக்கியச் சடங்குகளை என் கணவர் அண்டு டீம் போட்டோ எடுக்க, நான் ஆனந்தக் கண்ணீர், குழந்தை களோட சிரிப்பு, உறவினர்களின் அரட்டை, பெரியவங்களோட ஆசினு இப்படி உணர்ச்சிகள் மிதக்கும் தருணங்களை க்ளிக் செய்தேன். பார்த்துட்டு, ‘வொண்டர் ஃபுல்’னு சொன்னார் என் கணவர். ஆல்பம் பார்க்கும்போது, ‘ஹே இதையெல்லாம்கூட நிகிதா எவ்ளோ அழகா எடுத்திருக்கா’னு எல்லோரும் சர்ப்ரைஸாகி பாராட்டினாங்க. அதுதான் நான் என்னை ஒரு முழுமையான போட்டோகிராபரா உணர்ந்த முதல் தருணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick