உறவுகளை இயல்பாக அணுகுங்கள்...

மனநலம்லஷ்மி, படம்: Ashwin Th-Clicker Photography

பிறந்தது முதல் கூடவே இருந்த உறவுகளைப் பிரிந்து, தங்கள் வீட்டின் உறுப்பினராக இணையவிருக்கும் புதுப்பெண்ணை மகிழ்வுடன் வரவேற்கிறோம். அதைத் தொடர்ந்து கலாசாரம், பழக்கவழக்கங்கள், உறவுகளிடம் அளவளாவுதல் என அவள், அதுவரை வாழ்ந்த வாழ்க்கைமுறைக்கு மாறாக பல விஷயங்கள் திணிக்கப்படுகின்றன. ஆனால், அந்தத் தடைகளில் முடங்கிவிடாமல் தனக்கான சுய மரியாதையைப் பாதுகாத்தால்தான் ஒரு பெண் புகுந்த வீட்டினருடன் ஆரோக்கியமான மனநிலையில் பழக முடியும். உறவுகளில் விரிசல்விடாமலும் தனக்கான சுயத்தை இழக்காமலும் இருக்க உதவும் நுணுக்கங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார் உளவியல் ஆலோசகர், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் வேள்பாரி.

* புதுக் குடும்ப உறுப்பினர்களின் உறவு முறைகளைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு,  அன்பாகவும் ஆர்ப்பாட்டம் இன்றியும் இனிமையாகப் பழகுங்கள். முதலில் ஒவ்வொருவரின் பர்சனா லிட்டியையும் புரிந்து கொள்ளுங்கள். பழகும்போது அந்த உறவுமுறைக்கு ஏற்ற எல்லைகளில் வைத்துக் கொள்வதும் அவசியம். ‘ரொம்ப நல்ல பொண்ணு’ என்று பெயரெடுப்பதற்காக விட்டுக் கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கும் பெண்கள் நிறையவே இழக்கின்றனர். அதனால், உங்களது பர்சனல் விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை எப்போதும் உங்கள் கைகளில்தான் என்பதில் தெளிவுடன் இருப்பது அவசியம்.
 உங்கள் பழக்கவழக்கங்கள் அவர்களுக்குப் புதிதாகவும் வித்தியாசமாகவும் இருப்பதாகக் கூறினாலும், அதுகுறித்து கேலி பேசினாலும், ஆரம்பத்தில் புன்னகையுடன் தவிர்த்திடுங்கள். உங்களது நிறம், எடை, ரசனை என தொடர்ந்து கிண்டல் செய்ய அனுமதித்தீர்களானால், அது உங்களுக்குள் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். அதனால், அவற்றை வளரவிட வேண்டாம். உங்களை இழிவுபடுத்தும் கேலிகளுக்குச் சிரித்து ஆமோதிக்காமல், மவுனமாக இருந்தே உங்களது விருப்பமின்மையை வெளிப்படுத்துங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick