திருமணம் - அருள் புரியும் அழகு முத்து அய்யனார்

கோயில்...எஸ்.தேவராஜன், ஜெ.முருகன் படங்கள்: குரூஸ்தனம்

றைவனிடம் நாம் வேண்டியது நிறைவேறிவிட்டால், அதற்கு நன்றிக் காணிக்கையாக அபிஷேக ஆராதனைகள் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்துவோம். அப்படிச் செய்யும்போது நம்முடைய வேண்டுதலை இறைவன் நிறைவேற்றிய விவரம் நமக்கும் கடவுளுக்கும் மட்டும்தானே தெரியும்? நம் கோரிக்கைகளை இறைவன் நிறைவேற்றிய அற்புதத்தை பக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு கோயிலில் சிலைகளை வைத்து, நன்றிக் காணிக்கை செலுத்துகின்றனர் பக்தர்கள். அப்படி பல வடிவங்களில் உள்ள சிலைகள் அழகுறக் காட்சி தரும் கோயில்தான் கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு அழகுமுத்து ஐயனார் கோயில். பூர்ணா, புஷ்கலா (இந்தக் கோயிலில் பூர்ணையை பூர்ணா என்றும் பொற்கலையை புஷ்கலா என்றும் அழைக்கப்படுகிறார்கள்) சமேதராகக் காட்சி தரும் அருள்மிகு அழகுமுத்து ஐயனார் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஸ்ரீஅழகுசித்தர் ஜீவசமாதி கோயில். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நன்றிக் காணிக்கையாகச் சிலைகளை வைத்து வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் அழகு சித்தர்தான்.

சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பன் பிரம்மசாரியாக இருப்பதன் பின்னணியில் அமைந்திருக்கும் சம்பவமே இந்தக் கோயிலின் தலவரலாறாக அந்தப் பகுதி மக்களால் சொல்லப்படுகிறது.

புராண காலத்தில் இந்தப் பகுதியில் சிவபெருமானுக்கும் மோகினி வடிவத்தில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் குழந்தையாகப் பிறந்தவர் ஐயனார். அந்த கிராமம் இப்போது கீழ்ப்புதுப்பட்டு என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் தங்களுக்குப் பிறந்த குழந்தையை, தென்னம்பாக்கத்தில் இருந்த ஒரு முனிவரிடம் கொடுத்து வளர்க்கும்படி விட்டுச் சென்றனர். முனிவரும், தன்னுடைய பெண் குழந்தைகளான பூர்ணை, பொற்கலை ஆகியோரை அன்புடன் வளர்த்து வந்ததைப் போலவே, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைக்கு அழகர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அழகரும் ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தேர்ந்து, வீரமும் விவேகமும் கொண்டவராக விளங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick