உடைப் பராமரிப்பு | How to Preserve Your Wedding Dress - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

உடைப் பராமரிப்பு

காஸ்ட்யூம் & அக்சஸரீஸ்

குந்தன், சமிக்கி, ஜர்தோஸி என்று வேலைப்பாடுகள் நிறைந்த லெஹங்காவையும், டிசைனர் புடவைகளையும் ஆசைப்பட்டு வாங்கிவிடுகிறோம். அதன் பிறகோ, டிசைனர்  உடைகளை வீட்டிலேயே துவைக்கலாமா, முறுக்கிப் பிழியலாமா, கொலுசில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க லெஹங்காவில் ஃபால்ஸ் வைக்கலாமா என்று வரிசைகட்டி நிற்கின்றன சந்தேகங்கள். தெளிவாக விளக்குகிறார் ஃபேஷன் டிசைனர் தபு.

டிசைனர் டிரஸ்களை ஒருமுறை உடுத்திய பின்னர் துவைக்க வேண்டுமா?

வேண்டவே வேண்டாம். ஒருமுறை உடுத்தியதும், விரித்துவிட்டு ஃபேனில் உலரவிடுங்கள். வியர்வை உலர்ந்ததும் மடித்து வார்ட்ரோபில் வையுங்கள். வியர்வை வாடை ஒருவேளை தொந்தரவு செய்வதாக இருந்தால், வெள்ளை பெட்ரோலைப் பஞ்சால் தொட்டு, வியர்வைபட்ட இடங்களில் துடைத்து, உலரவிடுங்கள். வெள்ளை பெட்ரோல் கொண்டு துடைக்கும்போது, வாடையுடன் வியர்வையினால் துணியில் ஏற்பட்ட கறையும் நீங்கிவிடும். பட்டு ஜாக்கெட்டுக்கும் இதே முறையைப் பின்பற்றலாம். வெள்ளை பெட்ரோல் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும்.

டிசைனர் டிரஸ்களை வீட்டிலேயே துவைக்கலாமா?

மெட்டீரியல் மற்றும் வொர்க்கைப் பொறுத்து சிலவற்றை வீட்டில் துவைக்கலாம்; சிலவற்றைக் கூடவே கூடாது. சமிக்கி வொர்க், மிரர் வொர்க் மற்றும் த்ரெட் வொர்க் செய்யப்பட்ட  டிரஸ்களை வீட்டிலேயே கையால் துவைக்கலாம். ஆனால், வாஷிங் மெஷினில் துவைக்கக் கூடாது. கைகளால் முறுக்கிப் பிழியவும் கூடாது. அப்படிப் பிழிந்தால் வேலைப்பாடுகள் தளர்வாகும் அல்லது அறுந்துபோகும்.

வீட்டிலேயே துவைக்கக்கூடியது டிசைனர் டிரஸ்தான், ஆனால், சாயம் போகக்கூடியது என்றால், முதல் சலவையை டிரை க்ளீனிங் கொடுத்துவிட்டு, இரண்டாவது சலவையில் இருந்து  வீட்டில் துவைக்கலாம்.

ஜர்தோஸி வொர்க் செய்யப்பட்ட உடைகளை, எக்காரணம் கொண்டும் வீட்டில் துவைக்கவே கூடாது. அவை தண்ணீர்பட்டால் கறுத்துவிடும்.