DJ - இசை ஜோடிகள் | DJ couple Deepika Naveen interview - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

DJ - இசை ஜோடிகள்

நியூ ஐடியா

 `பியார்... பிரேமா...காதல்...’ என உலக மொழிகளில் இருக்கும் அத்தனை லவ்வோடு கொஞ்சம் மியூசிக் சேர்த்த ‘டி.ஜெ’-க்களாக கலக்குகிறார்கள் தீபிகா - நவீன் ஜோடி. இருவரும் இணைந்து பார்ட்டி, வெடிங் என பிரமாண்ட குடும்ப விழாக்களை ஹார்ட்டும் பீட்டுமாகத் தெறிக்க விடுகிறார்கள்.  இன்றைய தேதியில் `இந்தியாவின் ஒரே ‘டி.ஜெ’ தம்பதி’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள். இந்த ஜோடி ஒருங்கிணைத்த ‘டி.ஜெ நைட்’ நிகழ்ச்சிக்கு அண்மையில் சென்றிருந்தேன். உற்சாக பானம் இல்லாத 100% உற்சாகம் மட்டுமே நிறைந்து வழியும் ‘டி.ஜெ’ நைட் அது. ஆறிலிருந்து அறுபது வயதுவரை ஒரு கூட்டமே இவர்களின் விரல் தேய்ப்புக்கு மகுடிக்கு ஆடும் பாம்பென நடனமாடுவதைக் கண்டேன்.