தாம்பத்தியம்... என்ன சொல்கிறது? - பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி | Sexologist Dr. Narayana Reddy talk about sex - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

தாம்பத்தியம்... என்ன சொல்கிறது? - பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி

எக்ஸ்பர்ட்

ழகான தாமரைத் தடாகம். மாலை வந்ததும் தாமரைப்பூக்கள் தங்கள் இதழ்களை மெள்ள மெள்ள மூட ஆரம்பிக்கின்றன. ஒரு தாமரையில் மட்டும் வண்டு ஒன்று தேன் உண்ட மயக்கத்தில் மகரந்தப்படுக்கையிலேயே உறங்கிவிட்டது. வண்டு சுவாசிக்கக் காற்று வருமளவுக்குத் தாமரை தன் இதழ்களைத் தளர்வாக மூடுகிறது. இரவெல்லாம் உறங்கிய வண்டு சூரியன் வருவதற்கு முன்னரே துயில் கலைந்து எழுந்துவிடுகிறது. ஆனால், தன் சிறகுகளை விரித்தால், தாமரையின் இதழ்கள் கிழிந்துவிடும் என்பதால், தாமரை இதழ்கள் மலரும்வரை அப்படியே படுத்துக்கொண்டிருக்கிறது. அகநூல் ஒன்றில், மேலே சொன்ன அர்த்தத்தில் பாடல் ஒன்று வரும். தாமரைகள் வண்டின் மூச்சை நிறுத்துவதில்லை; வண்டுகள் தங்கள் சிறகின் வலிமையால் மலரின் இதழ்களைக் கிழிப்பதுமில்லை. இந்த இயற்கைத் தத்துவம் தாம்பத்தியத்துக்கும் பொருந்தும். அதிலும் புதுமணத் தம்பதிகளின் புத்தம் புது தாம்பத்தியத்துக்கு நிறையவே பொருந்தும். பரஸ்பரம் இருவரும் உணர்வுகளையும் உடல்களையும் பரிமாறிக்கொள்ள ஆரம்பிக்கிற தாம்பத்தியத்தின் ஆரம்பத்தில், ஆயிரத்தெட்டு சந்தேகங்களும் கேள்விகளும் தம்பதியின் மனங்களில் ஓடிக்கொண்டே இருக்கும். அவற்றுக்கெல்லாம், இந்தக் கட்டுரை வழியே தீர்வு சொல்கிறார் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி.