ஹேர் ஸ்டைலிங் எனும் கலை! | Hair style Tips for Bride - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

ஹேர் ஸ்டைலிங் எனும் கலை!

திருமணத்தின்போது கூந்தலை நடுவகிடு எடுத்து, நெற்றிச்சுட்டி அணிந்து, குஞ்சம்வைத்து அலங்கரித்த பின்னல் முழுக்க பூச்சூடி... இதுதான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மணமகளின் ஹேர்ஸ்டைலாக இருந்தது. ஆனால், இப்போது ஹை பன் (high bun), பிஷ்டெயில் (fishtail), பிரெஞ்சு பிரைடு (French braid), மெஸ்ஸி பன் (messy bun) என மணப்பெண்ணின் ஹேர்ஸ்டைல்கள் நவீனமாகிவருகின்றன. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சலூன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் சங்கீத், முகூர்த்தம், ரிசப்ஷன் என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெரைட்டியான, அதேநேரம் மணப்பெண்ணின் முக அமைப்புக்கு ஏற்ப ஹேர்ஸ்டைல்கள் செய்து வாடிக்கையாளர்களின் மனதில் தனி இடம் பிடித்திருப்பவர், சென்னையைச் சேர்ந்த ஹேர்ஸ்டைலிஸ்ட் விஜயராகவன். இவர் ராகவன் என்று அழைக்கப்படுகிறார். 18 ஆண்டுகளாக ஹேர்ஸ்டைலிங் செய்து வரும் ராகவன், இந்தத் துறைக்கு வந்தது பற்றியும், முக அமைப்புகளுக்கு ஏற்ற மற்றும் ட்ரெண்டில் உள்ள ஹேர்ஸ்டைல்கள் பற்றிய தகவல்களையும் பகிர்கிறார்.