திருமணத்தடை ஏற்படுத்தும் தோஷங்களும் பரிகாரங்களும்... | Dosham and Remedies for Marriage delay - Aval Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

திருமணத்தடை ஏற்படுத்தும் தோஷங்களும் பரிகாரங்களும்...

ஜோதிடத் திலகம் காழியூர் நாராயணன்

`மனைவி, கணவன் அணியும் ஆபரணம்; கணவனோ மனைவியின் பொக்கிஷம்’ என்பார்கள். அதனால்தான் நம் சமூகத்தில் திருமணம் அத்தனைச் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இரு மனங்கள் ஒன்றிணைவது மட்டுமல்ல திருமணம், இரண்டு குடும்பங்களின் சங்கமம். அவர்களின் வழியாக வாழையடி வாழையாகத் தழைக்கும் ஒரு சந்ததியின் தொடக்கம்.

திருமணத்துக்குப் பெண் பார்க்கவோ, வரன் பார்க்கவோ தொடங்கும்போது ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம். ஜோதிட சாஸ்திரபடி ஜாதகக் கட்டத்தில் லக்னம் தொடங்கி, 12-வது வீடு வரை ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு விதமான பொறுப்பு உண்டு.

திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை களத்திரஸ்தானம் அல்லது சப்தமஸ்தானம் எனப்படும் ஏழாமிடத்தில் என்ன கிரகம் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். எந்த கிரகமும் இல்லாவிட்டால், ஏழாமிடத்துக்கு உடைய கிரகம் எந்த வீட்டில் இருக்கிறதென்று பார்க்க வேண்டும்.

ஏழாமிடம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறதென்றால், இரண்டையும் ஐந்தையும் கூட்டினால் ஏழு அதாவது இரண்டாமிடம் தனம் , குடும்பம், வாக்குஸ்தானம். ஐந்தாமிடம் பூர்வ புண்ணியஸ்தானம். இந்த இரண்டு இடங்களை வைத்தே ஒருவருக்கு மனைவி அல்லது கணவன் அமைவார். இதை வைத்தே அவருக்கு எந்தக் குடும்பத்தில், எந்த திசையில் மணமகள், மணமகன் அமைவார்கள் என்பதைச் சொல்லி விடலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க