மணமகளின் மலரும் நினைவுகள் | The memories of the bride - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

மணமகளின் மலரும் நினைவுகள்

பெண்களின் வாழ்க்கையில் மணியடித்து லைட் எரிகிற காதலைவிடவும் `டும் டும்’ கொட்டுகிற திருமணம் மிகவும் ஸ்பெஷல். உற்றார், உறவினர் முன்னிலையில் தன் ஸ்வீட்மேனின் சுண்டுவிரலுடன் தன் சுண்டுவிரல் சேர்க்கிற அந்த ஐஸ்க்ரீம் தருணத்தை, வாழ்க்கையின் கடைசி நொடி வரை பெண்களால் மறக்கவே முடியாது. அந்த ‘பிக் டே’வில் நடந்த அத்தனை சம்பவங்களுமே பெண்களின் மனதில் ஃபிரேம் பை ஃபிரேமாக பதிந்திருக்கும். ஆஸ்திரேலியாவில் இருக்கிற பவ்யா அரவிந்தின் மனதிலும், நான்கு மாதங்களுக்கு முன் நடந்த திருமண நாள் அப்படித்தான் பதிந்திருக்கிறது. அவருடைய திருமணக் கனவுகள், அன்றைக்கு அனுபவித்த ஆனந்தங்கள், சந்தித்த சவால்கள், அவற்றைச் சமாளித்த விதம் எல்லாவற்றையும் விவரிக்கிறார்.