பிக் டே மெஜிஷியன் | Successful bridal makeup expert Radhika - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

பிக் டே மெஜிஷியன்

ணமகள் அலங்காரத்தில் பெண்களின் விருப்பத்துக்கும் ஆர்வத்துக்கும் ஈடுகொடுத்து, நேர்த்தியான பிரைடல் மேக்கப் மூலம், அவர்களைப்  பார்த்து அவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு மிளிரவைக்கும் ‘பிக் டே மெஜிஷியன்’ ராதிகா. பிரைடல் மேக்கப்பில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பவர். செங்கல்பட்டு, ‘ராதீஸ் மேக் ஓவர் ஸ்டுடியோ’வின் உரிமையாளர். 21 ஆண்டுகளாகத் தொடரும் இந்த சக்சஸ்ஃபுல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட், தன் பயணம் பற்றிப் பகிர்கிறார்.

“மணமகள் அலங்காரம் என்பது நூறு சதவிகிதம் திருப்திகரமாக இருந்தால்தான், பொன் நகை அணிந்த பெண்ணின் முகத்தில் புன்னகையும் பூக்கும். மணப்பெண்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அதே நேரத்தில் அவர்களுக்குப் பொருத்தமான மேக்கப்பை செய்வதில்தான் இருக்கிறது ஒரு மேக்கப்  ஆர்ட்டிஸ்ட்டின் வெற்றி. அதனால் ஒரு மேக்கப் கலைஞர் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும்; சின்னச் சின்ன நுணுக்கங்களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம்’’ என்று ஆரம்பிக்கிறார் ராதிகா.