ஆரோக்கிய திருமணம்! | Medical Checkup tips before Marriage - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

ஆரோக்கிய திருமணம்!

திருமணப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியதுமே மணமக்களின் மனதில் கனவுகள் மொட்டு விடத் தொடங்கிவிடும். வாழ்க்கைப் புத்தகத்தில் புதிய அத்தியாயத்தைத் திருமண உறவுகள் தொடங்கிவைக்கின்றன. அவை நலமுடனும் வளமுடனும் அமைய, மனநலத்தோடு உடல்நலமும் பேணி இருக்க வேண்டியது அவசியம். மணமக்கள் இருவர் வீட்டிலும் திருமணப் பொருத்தம் தொடங்கி பொருளாதாரம், குடும்பப் பின்னணி என எல்லா பொருத்தங்களையும் அவதானித்து முடிவெடுக்கிறார்கள். ஆனால், அடிப்படையான ஒரு விஷயத்தைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். அதுதான், மணமக்கள் உடல்நலன் சார்ந்த மருத்துவ வரலாறு. மணமக்கள் இருவரும் மனதளவிலும் உடலளவிலும் நலம் பெற்றவர்களாக இருக்கிறார்களா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். திருமண வாழ்வில் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கவும் நிலைத்த மகிழ்வான, திருமண வாழ்வை உறுதி செய்யவும் திருமணத்துக்கு முன்பாக சில மருத்துவப் பரிசோதனைகள் செய்வது அவசியம். குடும்பநலம் சார்ந்த பல வழக்குகளில் நீதிபதிகளே, ‘திருமணத்துக்கு முன்பு மணமக்கள் கட்டாயம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தியிருக்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க