களைகட்டும் கல்யாணம்! | Gowtham shares about Wedding Planner - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

களைகட்டும் கல்யாணம்!

திருமணம் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான பழமொழி ஒன்று உண்டு. ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’. அதை உண்மையாக்கிக்கொண்டிருக்கின்றனர் ‘வெடிங் பிளானர்ஸ்’. ஆம், மணமக்களுக்குப் பிடித்த இடம் சொர்க்கமாகவே இருந்தாலும், அதை அழகாக டிசைன் செய்து அசத்தலாக  ரெட் கார்பெட் விரிப்பார்கள். திருமண நிகழ்ச்சியை அனைவரது வாழ்விலும் மறக்கமுடியாத தருணமாக மாற்றுவதில் இவர்களுக்குப் பெரும் பங்குண்டு. ரசனையும் பொறுப்பும் ஒருசேரக் கலந்த இந்த வேலையில் பலரையும் கவர்கிறார்கள் ‘தி நாட்’ வெடிங் பிளானர்ஸ். பல பிரபலங்கள் வீட்டு வெடிங், பர்த்டே ஃபங்ஷன், கார்ப்பரேட் ஈவென்ட்ஸ், சினிமா ஆடியோ லான்ச் என வெரைட்டியாக பல வேலைகள் செய்து அசத்திக்கொண்டிருக்கும் ‘தி-நாட்’  நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் கௌதமுடன் பேசினோம்.