ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சந்தோஷம் வளர்பிறை ஆக வேண்டுமா..?

'மைனா’, 'கும்கி’ என தான் நடித்த அனைத்துத் திரைப்படங்களிலும் நம் மனதில் இடம் பிடித்தவர், நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா.

''என் அம்மா, மாமியார், மனைவி, மகள்... இந்த நாலு பெண்கள் மட்டும் இல்லைன்னா, நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. அந்தளவுக்கு என் தோல்வியின்போது அவங்க தோள் கொடுத்தாங்க! என் வீட்டுப் பெண்கள் மட்டுமில்ல... எல்லா பெண்கள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

 

இன்னிக்கு பெண்கள் பலரும் வேலைக்குப் போறதையும், பொருளாதார சுதந்திரத்தோட இருக்கிறதையும் பார்க்க சந்தோஷமா இருக்கு. அவங்களோட திறமைக்கு நான் தலை வணங்குறேன். இவங்களுக்காவது வேலைக்கான ஊதியம் கிடைக்கும், பாராட்டு கிடைக்கும், அங்கீகாரம் கிடைக்கும், உலகத்தோட பழகுற வாய்ப்பு கிடைக்கும். ஆனா, இல்லத்தரசிகளுக்கு நாலு சுவர்கள்தான் உலகம். நாள் முழுக்க உழைப்பாங்க. ஆனா, சம்பளம் எதுவும் கிடையாது. ருசியா சமைச்சாலும், வீட்டை நேர்த்தியா பராமரிச்சாலும் அதுக்கான பாராட்டோ... அங்கீகாரமோ அவங்களுக்குக் கிடைக்கிறதில்ல. இருந்தாலும் அதையெல்லாம் எதிர்பார்க்காம, அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாகவும், அறிவு நிரம்பியதாகவும் வளர்க்கிறதையே தங்களோட சந்தோஷமா நினைச்சு வாழறாங்க.

ஒரு ஆண் பொருளீட்டும் தேவைக்காக வெளியே போயிட்டு வீடு திரும்பும்போது, அவன் சந்திச்ச அவமானங்கள், ஏமாற்றங்கள், காத்திருப்புகள்னு எல்லா சங்கடங்களையும் சுமந்துட்டுதான் வருவான். அப்படி வரும்போது, அவன் முகம் பார்த்து மனநிலையை அறிந்து, 'வெளியே யார் என்ன சொன்னா என்ன? இந்த வீட்டுக்கு நீங்கதான் ராஜா!’னு மனைவி அவனைக் கொண்டாடி அரவணைச்சா, அத்தனை சோர்வும் அவனை விட்டு நீங்கும். அதேபோல, தன் மனைவிக்கான மரியாதையை எல்லா சூழலிலும் ஒரு கணவன் தவறாம வழங்கினா, அதுதான் அவன் அவளுக்குத் தரும் பெரிய பரிசா இருக்கும். தன் குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதும்னு நினைக்காம, இயன்றவரை மற்றவங்களுக்கும் உதவும் தம்பதிகளோட இல்லறத்தில், சந்தோஷம் வளர்பிறை ஆகும்!

'அவள் விகடன்’ குரல் ஒலி வழியா உங்ககிட்ட பேசப் போறேன். என்ன பேசப் போறேன்னு சொல்ல மாட்டேன். ஆனா, வாசகிகள் ஒவ்வொருத்தரும் ரசிச்சுக் கேட்க, சிந்திக்க வேண்டிய பல விஷயங்கள் அதில் இருக்கும்!''

உதவி இயக்குநர், இயக்குநராக இருந்து, இன்று காமெடியில் கலக்கும் தம்பி ராமையா, 'கலங்காதிரு மனமே’ மூலமாக உரையாடுகிறார் உங்களுடன்!

மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 வரை தினமும் 3 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

044 - 66802912* என்ற எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick